2018 ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்!

0
923
Asiacup

வருகின்ற ஆகஸ்ட் இருபத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்ஸில் 15வது ஆசிய கோப்பை போட்டி துவங்க இருக்கிறது. 2016ஆம் ஆண்டு 20 ஓவர் வடிவத்தில் நடத்தப்பட்ட ஆசியக் கோப்பை 2018 ஆம் ஆண்டு மீண்டும் 50 ஓவர் வடிவத்தில் நடத்தப்பட்டது. இந்த முறை மீண்டும் இருபது ஓவர் வடிவத்தில் நடத்தப்படுகிறது.

ஒட்டுமொத்த ஆசிய கோப்பை தொடர்களில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இந்திய அணியில் இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் கோப்பையை வென்று இருந்தது. கோப்பையை வென்ற இந்த இந்திய அணியில் 15 வீரர்கள் இடம் பிடித்து இருந்தனர். தற்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

- Advertisement -

ரோகித் சர்மா:
விராட் கோலி விளையாட முடியாமல் போக ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்று தொடக்க வீரராக களம் இறங்கினார். இப்போது இவர் இந்திய அணிக்கு 3 வடிவத்திலும் கேப்டனாக இருக்கிறார்.

ஷிகர் தவான்:
தற்போது ஷிகர் தவன் இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே இருக்கிறார். t20 வடிவத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு இவருக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை.

அம்பதி ராயுடு:
2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு கடைசி நேரத்தில் கழட்டி விடப்பட்ட இவர் விரக்தியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்பு ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

மணிஷ் பாண்டே:
இந்திய அணியில் அதிக வாய்ப்புகளை பெற்ற வீரன் இவர் என்று கூறலாம். ஆனால் டி20 போட்டி வடிவத்தில் இவரது பேட்டிங் எதிர்பார்த்தபடி அதிரடியாய் இல்லை மேலும் சீராகவும் இல்லை. தற்போது இவர் தனது மாநில கர்நாடக அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார்.

கே எல் ராகுல்:
கடந்த முறை மூன்றாவது துவக்க வீரராக அணியில் இருந்த இவர் இந்த முறை இந்திய அணியின் துணை கேப்டன் என்ற சிறப்போடு முக்கிய துவக்க வீரராக இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இவர் தற்போது சென்னை அணியின் கேப்டனாக செயலாற்றி வருகிறார்.

தினேஷ் கார்த்திக்:
2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இதன்மூலம் இந்திய அணியில் இடம் பெற்றதோடு ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

கேதார் ஜாதவ்:
இந்திய அணியில் ஸ்பின் ஆல்-ரவுண்டராக மகேந்திர சிங் தோனியால் மாற்றப்பட்ட இவர், தற்போது ஐபிஎல் தொடரில் கூட இல்லை.

ஹர்திக் பாண்டியா:
இந்திய அணியில் மிக முக்கியமான வீரராக தற்போது இவர் தான் இருக்கிறார். இவரின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்ட் செயல்பாடுகளுக்கு இன்னொரு மாற்று வீரர் கிடையாது.

அக்சர் படேல் :
இந்திய அணியில் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஸ்பின் ஆல்-ரவுண்டராக உருவாகி இருக்கிறார். தற்போதைய ஆசிய கோப்பை அணியில் இவருக்கு இடமில்லை என்றாலும், இந்திய கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக தொடர்கிறார்.

குல்தீப் யாதவ்:
இந்திய அணிக்கு வெள்ளை பந்து போட்டிகளில் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கு இடம் பெற்றிருக்கிறார் ஆனால் ஆசிய கோப்பை அணியில் இவருக்கு இடம் வழங்கப்படவில்லை.

புவனேஸ்வர் குமார்:
தற்போதைய இந்திய அணியிலும் ஆசிய கோப்பை அணியிலும் பிரதான வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்று இருக்கிறார்.

ஜஸ்பிரித் பும்ரா:
மூன்று வடிவத்தில் காட்டிலும் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தால் இந்த முறை ஆசிய கோப்பை அணியில் இருந்து விலகி இருக்கிறார்.

ஷர்துல் தாகூர்:
தற்பொழுது புதிதாக உருவாக்கப்பட்டு வரும் இந்திய அணியில் இவருக்கான இடம் மிகவும் குறைவாக இருக்கிறது. முக்கிய வீரர்கள் விளையாடாவிட்டால் மட்டுமே இவருக்கான வாய்ப்பு என்பது இந்திய வெள்ளை பந்து அணியில் இருக்கிறது.

கலில் அகமது:
ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்று இவருக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் தரப்பட்டது. அதில் இவரால் ஜொலிக்க முடியாத காரணத்தால் தற்போது அணிக்கு வெளியே இருக்கிறார்!