2025 சாம்பியன்ஸ் டிராபி.. இங்கிலாந்துக்கு வந்த சிக்கல்.. ஐசிசி வைத்த செக்.. உலக சாம்பியனுக்கு நேர்ந்த பரிதாபம்!

0
7212
England

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் இந்திய அணி 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதற்கு அடுத்து ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகள் பெற்று 10 புள்ளிகள் உடன் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கிறது.

- Advertisement -

ஆறு போட்டிகளில் தலா 4 வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் எடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 5 போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று ஐந்து மற்றும் ஏழாவது இடங்களில் நான்கு புள்ளிகள் உடன் இருக்கிறார்கள். பாகிஸ்தான் ஆறு போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று ரன் ரேட் அடிப்படையில் இடையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

கடைசி மூன்று இடங்களில் நெதர்லாந்து அணி ஆறு போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று எட்டாவது இடத்திலும், ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகள் ஒரு வெற்றி உடன் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒன்பது பத்தாவது இடத்திலும் இருக்கின்றன.

- Advertisement -

2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் எட்டு அணிகள் பங்குபெறும் சாம்பியன் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்த சாம்பியன் டிராபி தொடரில், நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் ஏழு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும்.

அதாவது பாகிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் எந்த இடத்தில் இருந்தாலும் தொடரை நடத்துகின்ற காரணத்தினால் தகுதி பெற்று விடும். மீதமுள்ள ஏழு அணிகளுக்கு புள்ளி பட்டியலில் எட்டு இடங்களுக்குள் பாகிஸ்தானோடு சேர்த்து வந்தால் மட்டுமே, சாம்பியன் டிராபியில் விளையாட இடம் கிடைக்கும்.

ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை ஆகிய மூன்று அணிகளும் புள்ளி பட்டியலில் எட்டு இடங்களுக்குள் வருவதற்கு மிகுந்த போட்டியை கொடுத்து வருகின்றன. இதில் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள்தான் பின்தங்கி இருக்கின்றன.

இங்கிலாந்து அடுத்து வருகின்ற மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் இரண்டு தோல்விகளை இங்கிலாந்து பெற்று, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை தலா ஒரு வெற்றிகளையோ இல்லை அதற்கு அதிகமான வெற்றிகளை பெற்றால், நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தானில் அதிர்ச்சிகரமாக சாம்பியன் டிராபியில் விளையாட முடியாமல் போகும்!