ஃபேர்வெல் போட்டியின்றி விடைபெற்ற 2011 உலக கோப்பை வென்ற 6 சீனியர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
1595
2011 World Cup

ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு இந்திய அணியில் விளையாடி அதிலும் குறிப்பாக உலக கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற செய்ய வேண்டும் என்பதே.

அதன்படி பல கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது ஆனால் ஒருசில கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும் வாய்ப்பு கிடைத்த ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் மிகச் சிறப்பாக விளையாடி உலக கோப்பையை வென்ற போதிலும் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் பொழுது ஃபேர்வெல் போட்டியின்றி விடைபெற்று இருந்திருக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் யார் என்று பார்ப்போம்

- Advertisement -

1. கௌதம் கம்பீர்

கௌதம் கம்பீர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார். 2007 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 தொடரில் மிக சிறப்பாக விளையாடியது நம் அனைவருக்கும் தெரியும். 20 ஓவர் உலக கோப்பை தொடரை போலவே 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் மிக சிறப்பாக விளையாடினார்.

குறிப்பாக இலங்கை அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இவர் அடித்த 97 ரன்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது என்று கூறலாம். மேலும் 2012ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலக சிறந்த ஒரு நாள் வீரர்கள் மத்தியில் ஒரு வீரராக இவர் இடம்பெற்றிருந்தார். மேலும் 2009ஆம் ஆண்டு ஐசிசி அந்த வருடத்திற்கான சிறந்த வீரராக இவரை சிறந்த வீரராக தேர்ந்தெடுத்தது.

வெவ்வேறு போட்டியில் இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடி, 2018 ஆம் ஆண்டு தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிட்டார். இவர் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டி 2013இல் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கான ஃபேர்வெல் போட்டி விளையாடமலையே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

2. விரேந்திர சேவாக்

சேவாக் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக பலமுறை அதிரடியாக விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதமும், நான்கு முறை இரட்டை சதமும் அதேசமயம் 23 முறை சதத்தையும் தனது கிரிக்கெட் கேரியரில் குவித்துள்ளார் ஒருநாள் போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி 15 சதங்கள் குவித்திருக்கிறார். அதில் ஒரு இரட்டை சதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு ஐசிசி அந்த ஆண்டிற்கான சிறந்த வீரராக இவரைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கம்பீரை போலவே இவரும்
ஃபேர்வெல் போட்டி விளையாடமலையே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.

3. யுவராஜ் சிங்

இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றால் அது கண்டிப்பாக இவர்தான். 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இவர் விளையாடிய விதம் அனைவருக்கும் தெரியும். அந்த உலக கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என மிக சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை அளித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி படுத்தினார். உலக கோப்பை தொடரில் தொடர் அதற்கான சிறந்த வீரர் என்கிறார் விருதைப் பெற்றார்.

2007-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் 6 பந்துகளில் அடுத்த 6 சிக்சர்கள் இன்றும் நம்மால் மறக்க முடியாது. பல போட்டிகளில் இவர் அளித்த பங்களிப்பு இந்திய அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறது. 17 வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடி சர்வதேச அளவில் இவர் 11,778 ரன்களை குவித்துள்ளார்.

உலக கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இவருக்கு கேன்சர் இருந்தது. இருப்பினும் அதையும் பொருட்படுத்தாமல் இந்திய அணிக்காக விளையாடிய ஒரு மாவீரர். கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் என்று அனைவரும் நினைத்த வேளையில், கேன்சரில் இருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் விளையாடினார். அது இவருடைய தன்னம்பிக்கையை பறை சாற்றும். சில போட்டிகளில் விளையாடி 2017 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிட்டார்.

சேவாக், கம்பீர் போல ஃபேர்வெல் போட்டி விளையாடமலையே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.

4. ஜாகிர் கான்

இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 317 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 282 விக்கெட்டுகளையும், உலக கோப்பை தொடரில் 2013 முதல் 2011 வரை மொத்தமாக 44 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இந்திய அணியில் விளையாடிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இவரும் ஒருவர்.

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் ஜாகீர்கான் தான் முதல் முறையாக நக்குல் பால் என்று சொல்லப்படுகிற ஒரு புதிய பந்து வேரியேஷனை கொண்டு வந்தார். மிக சிறப்பாக இந்திய அணிக்காக விளையாடி அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் கேரியரில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். 2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சில போட்டிகளில் பதவி வகித்தார். இருப்பினும் இவரும் ஃபேர்வெல் போட்டி விளையாடமலையே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.

5. மகேந்திர சிங் தோனி

இந்திய அணிக்காக மொத்தமாக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களையும் 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்கள் குவித்த வீரர். முதல் முறையாக நடந்த டி20 உலகக் கோப்பை தொடரை இவரது தலைமையில் இந்திய அணி வென்றது. அதேபோல 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் முதல் முறையாக இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றிய பின்னர், 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் 50 ஓவர் உலகக் கோப்பையை இவரது தலைமையில் இந்திய அணி வென்றது.

இறுதி போட்டியில் கௌதம் கம்பீர் உடன் இணைந்து இவர் அடித்த 91 ரன்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதி படுத்தியது என்று கூறலாம். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வெற்றி ரன்கள் இவரது சிக்சர் மூலம் வந்தது ஒவ்வொரு இந்திய ரசிகரின் நினைவில் இருந்து எப்பொழுதும் கொண்டே இருக்கும். 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் இவரது தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஐசிசி நடத்தும் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் ( 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ) வெற்றியை ருசி பார்த்த ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதி ஆட்டத்தில் இவர் கடைசியாக விளையாடினார். இவர் விளையாடும் வரை இந்திய அணி வெற்றி பெறும் என்று ஒவ்வொரு இந்திய ரசிகரும் நினைத்தார்கள். இறுதியில் இவர் அவுட்டாக இந்திய அணியும் அரை இறுதிப்போட்டியில் தோல்வி பெற்று வெளியேறியது.

அதன் பின்னர் மகேந்திர சிங் தோனி எந்தவித ஒருநாள் மற்றும் டி20 போட்டியிலும் விளையாடவில்லை. திடீரென ஆகஸ்ட் 15ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு தன்னுடைய ஓய்வு அறிக்கையை எந்தவித சத்தமும் இன்றி அறிவித்தார். அதன்மூலம் மகேந்திர சிங் தோனியும் ஃபேர்வெல் போட்டி விளையாடமலையே தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார்.

6. சுரேஷ் ரெய்னா

2011 உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றிய வீரர் சுரேஷ் ரெய்னா. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற சில நிமிடங்களிலேயே இவரும் தனது ஓய்வை அறிவித்து விட்டார். தோனி – ரெய்னாவின் நட்பை பற்றி நம் அனைவருக்கும் தெரியும்.

2018 இங்கிலாந்து தொடருக்கு பிறகு சுரேஷ் ரெய்னாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மிகவும் மதிப்பிற்க்குறிய வீர்களில் ஒருவரான ரெய்னாவுக்கு பேர்வல் போட்டி கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் அனைவரும் வருந்தினர்