2011 WC.. கழட்டி விடப்பட்ட ரோகித்.. யுவராஜ் செய்த உதவி.. யாரும் அறியாத தகவல்களை பகிர்ந்த ஹிட்மேன்!

0
1190
Rohit

இந்தியா கடைசியாக உலகக் கோப்பையை வென்றது, 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரைதான்!

இந்தத் தொடருக்கு முன்பாக நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்தும் ரோகித் சர்மா உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த நேரத்தில் உலகக்கோப்பை இந்திய அணியில் கூடுதல் பந்துவீச்சாளராக பியூஸ் சாவ்லா சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

கடந்த வாரத்தில் அப்போதைய தேர்வுக் குழுவின் உறுப்பினராக இருந்த ஒருவர்
“ரோகித் சர்மாவை நாங்கள் தேர்வு செய்தோம் ஆனால் மகேந்திர சிங் தோனிதான் அவரை வேண்டாம் என்று பியூர் சாவ்லாவை தேர்வு செய்தார்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தாங்கள் எப்படி அணியைத் தேர்வு செய்கிறோம்? தான் அணியில் தேர்வு செய்யப்படாத பொழுது எப்படி இருந்தது? யார் என்ன உதவினார்கள்? என்று தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது ” நான், பயிற்சியாளர்கள், மற்றும் தேர்வாளர்கள் ஒரு அணியை தேர்வு செய்வது என்பது, எதிரணி, விளையாடும் விக்கெட்டுகள், எங்களின் பலம் மற்றும் பலவீனங்கள், அதேபோல் எதிரணியின் பலம் மற்றும் பலவீனங்கள் என அனைத்து காரணிகளையும் மனதில் கொண்டுதான் அணியை தேர்வு செய்கிறோம்.

- Advertisement -

நாங்கள் எப்போதும் இந்த விஷயத்தில் சரியாகவே இருந்து விடவும் முடியாது. மேலும் மனிதர்களாகிய நாம் எப்படியும் தவறுகள் செய்யக்கூடியவர்களாகத்தான் இருப்போம். இதில் நாங்கள் எப்பொழுதும் சரியாக இருந்து விடமுடியாது.

ஒவ்வொரு முறையும் அணி தேர்வு செய்யப்படும் பொழுதும், விளையாடும் அணியை முடிவு செய்யும் பொழுதும், தேர்வு செய்யப்படாத வாய்ப்புக் கொடுக்கப்படாத வீரர்களை தொடர்பு கொண்டு அதற்கான காரணங்களை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.

இப்படி அணியில் சேர்க்க முடியாத வீரர்களை என்னிடத்தில் வைத்து நான் பார்ப்பேன். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு நான் தேர்வு செய்யப்படாத பொழுது அது என் இதயத்தை உடைக்கும் நிகழ்வாக இருந்தது. மேலும் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு எண்ணம் மிச்சம் இருக்கிறது என்று உணர்ந்தேன்.

நான் அப்பொழுது என்னுடைய அறையில் சோகமாக உட்கார்ந்து இருந்தேன். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. யுவராஜ் சிங் என்னை அவரது அறைக்கு அழைத்து, இரவு விருந்துக்கு கூட்டிச் சென்றார்.

நாம் அணியில் இருந்து நீக்கப்படும் பொழுது எப்படி உணர்கிறோம் என்பதை அவர் எனக்கு விளக்கினார். அவர் என்னிடம் ‘உங்களுக்கு கிரிக்கெட் விளையாட நிறைய வருடங்கள் இருக்கிறது. எனவே இதை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு உங்களது திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் நீங்கள் இந்திய அணிக்கு திரும்ப வரலாம். மேலும் உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போகவே போகாது’ என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்!