2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியை விட, 2007 லீக் சுற்றோடு வந்த இந்திய அணிதான் சிறந்தது – வீரேந்திர சேவாக் பரபரப்பான பேச்சு!

0
3072
ICT

இந்திய கிரிக்கெட்டில் மிக மோசமான ஆண்டாகவும், மிகச் சிறப்பான ஆண்டாகவும் ஒரே சமயத்தில் பதிவான ஆண்டு 2007 ஆம் ஆண்டு!

2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியைத் தழுவி முதல் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

இந்த சமயத்தில் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வீரர்களின் வீடுகளை தாக்குவது என்கின்ற அளவில் மிக கடுமையான முறையில் நடந்து கொண்டார்கள்.

ரசிகர்களின் இந்தச் செயல் இந்திய கிரிக்கெட் வீரர்களை மனதளவில் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியது. இதற்கு அடுத்து இதே ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய இளம் படை டி20 உலகக்கோப்பையை வென்று ஆறுதல் படுத்தியது.

2007 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், ஹர்பஜன்சிங், அனில் கும்ப்ளே, ஜாகிர் கான் என பெரிய பெரிய வீரர்கள் இருந்தார்கள். ஆனாலும் இந்திய அணியால் முதல் சுற்றைத் தாண்ட முடியவில்லை.

- Advertisement -

இதுகுறித்து இப்போது வீரேந்திர சேவாக் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது “2007ல் உலகக்கோப்பையில் ஏற்பட்ட தோல்வி அதிக காயத்தை ஏற்படுத்தியது. அந்தக் காலகட்டத்தில் எங்கள் அணி உலகிலேயே சிறந்ததாக இருந்தது. அதற்கு முன்பும் பின்பும் கூட இதை விட சிறந்த அணியை நீங்கள் பார்க்க முடியாது.

2003ல் இறுதிப்போட்டியில் நாங்கள் தோற்றோம், 2011 இறுதிப் போட்டியில் வென்றோம். ஆனால் கூட 2007 ஆம் ஆண்டு இருந்தது போலான அணி எப்பொழுதும் இருந்ததில்லை. நாங்கள் மூன்றில் இரண்டு போட்டிகளைத் தோற்று ஒன்றில் மட்டுமே வென்றோம்.

நாங்கள் அடுத்த லீக் சுற்று தாண்டி வந்துவிடுவோம் என்று எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் நாங்கள் தோல்வி அடைந்தோம். எங்களுக்கு அப்போது டிக்கெட்டுகள் இல்லை. நாங்கள் திரும்புவதற்கு இரண்டு நாட்கள் இடைவெளி இருந்தது.

இந்தச் சமயத்தில் ஹோட்டல் அறையை விட்டு நான் வெளியவே வரவில்லை. ரூம் சர்வீஸ் மற்றும் ஹவுஸ் கீப்பிங் என்று எதற்கும் யாரையும் அழைக்கவில்லை. பிரிசன் பிரேக்கிங் சீரியஸை மூன்று சீசன்களும் இரண்டு நாட்களாக உள்ளேயே இருந்து பார்த்து முடித்தேன்!” என்று கூறியிருக்கிறார்!