அன்று 2006 டிராவிட் கேப்டன்ஷி.. இன்று 2023 டிராவிட் கோச்சிங்கில்.. இந்திய அணி மோசமான சாதனை!

0
765
Dravid

இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடக்க இருக்க, இந்திய அணிக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது!

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் விளையாடிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என இந்திய அணி கைப்பற்றியது. மழையின் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

- Advertisement -

இந்த சுற்றுப் பயணத்தில் இதுவரை இல்லாமே நன்றாக சென்று கொண்டு இருந்த மாதிரியாகவே இருந்தது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்ததும் டாஸ் வென்று பேட்டிங் செய்யாமல் முதலில் ஒரு தவறை இந்தியா ஆரம்பித்து வைத்தது. அதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் பரிசோதனை முயற்சி செய்வதற்கு முதலில் பேட்டிங் செய்திருந்தால், இரண்டாவது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் சேர்ந்து விளையாடியிருப்பார்கள். இந்த தோல்விக்கு வாய்ப்பு இருந்திருக்காது.

இந்த நிலையில் அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதை தனிப்பட்ட தொடராக அணுகாமல், டிராவிட் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் ஒருநாள் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கும் வீரர்களை வைத்து பரிசோதிக்கிறது. இதன் காரணமாக ஒரே அணியில் இசான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இசான் கிஷான் கடந்த 16 டி20 இன்னிங்ஸ்களாக மிக மோசமாக விளையாடுகிறார். அதே நேரத்தில் ஜிதேஷ் சர்மா மாதிரியான அதிரடி விக்கெட் கீப்பர்களுக்கு அணியில் இடமில்லை. இன்னொரு பக்கத்தில் ஜெய்ஸ்வால் மாதிரியான அதிரடி இடதுகை பேட்ஸ்மேன் அணியில் எடுத்தும் விளையாட வாய்ப்பு தரப்படவில்லை. இதெல்லாம் டிராவிட் தலைமையிலான இந்திய அணி நிர்வாகத்தின் சொதப்பல்களாக  பார்க்கப்படுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் மொத்தம் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது. இதற்கு முன்னால் 2006 ஆம் ஆண்டு டிராபிக் தலைமையிலான இந்திய வெஸ்ட் இண்டீஸ்  சுற்றுப்பயணத்தில்தான், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றி, ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை ஒன்றுக்கு நான்கு என இந்திய அணி இழந்து இருந்தது. தற்பொழுது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மோசமான வரலாறு திரும்பி இருக்கிறது. மேலும் t20 கிரிக்கெட்டில் இரு நாடுகளுக்கு இடையே ஆன தொடரில் இரண்டு முறை தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோற்பது இதுவே முதல் முறை.

மேலும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில், அதற்கு முந்தைய உலகக் கோப்பையில் துவக்க வீரராக மிகச் சிறப்பாக விளையாடி இருந்த சச்சினை நான்காவது வீரராக கொண்டு வந்து சொதப்பி முதல் சுற்றோடு தோற்று இந்திய அணி வெளியேறியது. அந்த உலகக் கோப்பையில் கேப்டனாக இந்திய அணிக்கு இருந்தவர் டிராவிட்தான். அவர் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவுகளை தற்போது தந்து வருகிறது!