2003 ஆஸி உடன் பைனலில் செய்த.. இப்ப செய்யக்கூடாத 3 முக்கியமான தவறுகள்!

0
1521
ICT

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகின்றன!

பெரிய போட்டிகளில் விளையாடிய அனுபவம் இந்திய அணியை விட ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் அதிகம். அவர்கள் ஆண் பெண் கிரிக்கெட் என இரண்டிலும் பத்துக்கும் மேற்பட்ட உலகக் கோப்பைகளை கைவசம் வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடினார்கள். கங்குலி தலைமையில் விளையாடிய இந்திய அணி ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்தக் குறிப்பிட்ட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி மிக முக்கியமான மூன்று தவறுகளை செய்திருந்தது. அந்த தவறுகள் தான் இந்திய அணி வெகு எளிதாக கோப்பையை ஆஸ்திரேலியா வசம் ஒப்படைக்க காரணமாக அமைந்தது. அந்த மூன்று தவறுகளை இந்திய அணி செய்யாமல் இருந்தாலே இந்த முறை உலகக்கோப்பை வென்று விடலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

- Advertisement -

இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது:

இந்திய அணி அந்தத் தொடர் முழுக்க மிகச் சிறப்பான நம்பிக்கை ஆன தைரியமான ஆட்டத்தை ஒரு அணியாக சேர்ந்து விளையாடி வந்தது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் மட்டுமே தோல்வி அடைந்து இருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தங்களுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடவில்லை. சச்சின் பெரிய இலக்கை துரத்த வேண்டும் என்கின்ற நெருக்கடியில் தவறான ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை பறி கொடுத்தார்.

அழுத்தத்தின் கீழ் டாசில் தவறான முடிவெடுத்தது :

பெரிய போட்டியில் பெரிய அணிக்கு எதிராக விளையாட வேண்டிய அழுத்தத்தின் காரணமாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்க வேண்டிய இந்திய அணி, முதலில் ஆஸ்திரேலியாவை விளையாட விட்டு, இரண்டாவதாக பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த உலகக்கோப்பை டாஸ் முடிவெடுத்தபொழுதே இந்திய அணி இழந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்களை சீக்கிரத்தில் ஆட்டம் இழக்க செய்யாதது:

ஆஸ்திரேலியாவின் அப்போதைய துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஹைடன் மற்றும் ஆடம் கில்கிரிஸ்ட் இருவரையும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தின் கீழ் தவறான முறையில் பந்துவீசி விளையாட விட்டார்கள். குறிப்பாக ஜாகிர் கான் முதல் ஓவரையே அழுத்தத்தால் தவறாக வீச, அங்கிருந்தே ஆஸ்திரேலியாவுக்கு நல்ல அடித்தளம் துவங்குவதற்கான நம்பிக்கை உருவானது. ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்கள் இந்தியாவின் உலகக் கோப்பை கனவுக்கு எடுத்ததும் அதிரடியாக விளையாடி பிரச்சனையை உருவாக்கினார்கள்.

மேற்கண்ட மூன்று தவறுகளையும் செய்யாமல், இந்திய அணி நம்பிக்கையுடனும், தைரியத்துடனும், அதே வேளையில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இதைச் செய்யும் பட்சத்தில் இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டின் உலக சாம்பியன் ஆகும்!