20 ஆண்டு உலக கோப்பை வரலாறு.. 2வது முறையாக நியூசிக்கு எதிராக நெதர்லாந்து அரிய சாதனை!

0
2795
Netherlands

இன்று உலகக்கோப்பையின் ஐந்தாவது நாளில் ஆறாவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நியூசிலாந்து அணியும் நெதர்லாந்து அணியும் மோதி வருகின்றன!

நியூசிலாந்து அணி தனது முதல் போட்டியில் நடப்பு உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்தது.

- Advertisement -

நெதர்லாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இதே மைதானத்தில் எதிர்கொண்டு, அவர்களை 286 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்தியது. ஆனால் பேட்டிங்கில் சேஸ் செய்ய முடியாமல் தோல்வியடைந்தது.

இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி முதலில் டாஸ் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. நியூசிலாந்து அணியில் ஜேம்ஸ் நீசம் பதிலாக அதிவேக பந்துவீச்சாளர் பெர்குசன் வந்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் முதல் ஓவரை நெதர்லாந்தின் ஆரியன் தத் வீசினார். அந்த ஓவர் மெய்டன் ஆனது. இரண்டாவது ஓவரை ரியான் கிளைன் வீச, அந்த ஓவரும் மெய்டனானது. மூன்றாவது ஓவரை வீச வந்த ஆரியன் தத் மீண்டும் அந்த ஓவரை மெய்டன் ஆக்கினார்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் முதல் மூன்று ஓவர்கள் மெய்டன்களாக அமைவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் மூன்று ஓவரை மெய்டன்களாக வீசியிருந்தது. அதில் ஷான் பொல்லாக் இரண்டு ஓவரையும் மகாயா நிதினி ஒரு ஓவரையும் வீசியிருந்தார். அந்த போட்டியில் லாரா சதம் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 20 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நெதர்லாந்த அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் மூன்று ஓவர்களை மெய்டன்களாக வீசி இந்த அரிதான பட்டியலில் தங்களையும் இணைத்து இருக்கிறது.

மேலும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் அவர் விளையாடவில்லை. அவரது காயத்தின் தன்மை குறித்து எந்த செய்தியும் நியூசிலாந்து அணி நிர்வாகத்தின் தரப்பிலிருந்து வெளியிடப்படவும் இல்லை.