20 வருட காத்திருப்பு முடிந்தது.. காவலன் கோலி.. நியூசியை வென்றது இந்தியா.. புள்ளி பட்டியலில் முதலிடம்.. அரையிறுதி சுற்றுக்கு 99% உறுதி!

0
1641
Virat

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா முதலில் டாஸ் வென்று இந்தியா பந்து வீசும் என அறிவித்தார். இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் சர்துல் தாக்கூர் இருவரும் வெளியேற, சூரியகுமார் மற்றும் முகமது சமி இருவரும் விளையாடும் வாய்ப்பை பெற்றார்கள்.

- Advertisement -

ஆரம்பத்தில் சாதகமான நிலையில் நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கான்வே 0, வில் யங் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கடுத்து ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல் ஜோடி 151 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரச்சின் ரவீந்தரா 87 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடிய டேரில் மிட்சல் சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லாதம் 5, கிளன் பிலிப்ஸ் 23, மார்க் சாப்மேன் 6, மிட்சல் சான்ட்னர் 1, மேட் ஹென்றி 0, லாக்கி பெர்குஷன் 1, டிரண்ட் போல்ட் 0* என்ன ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் முகமது சமி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல் 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 26, ஸ்ரேயாஸ் ஐயர் 33, கேஎல்.ராகுல் 27, சூரியகுமார் யாதவ் 2 என அடுத்தடுத்து வெளியேற இந்திய அணிக்கு நெருக்கடி உருவானது.

- Advertisement -

இதற்கு அடுத்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா சேர்ந்து 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் ஐந்தாவது வெற்றியை உறுதி செய்தனர். சதம் அடிக்க முயற்சி செய்த விராட் கோலி இறுதி கட்டத்தில் 104 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதிவரை களத்தில் நின்ற ரவீந்திர ஜடேஜா 39 ரன்கள் எடுத்து 48வது ஓவரில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். கடைசி நேரத்தில் வந்த முகமது சமி ஒரு ரன்கள் உடன் களத்தில் நின்றார்.

இறுதியாக நியூசிலாந்து அணியை இந்திய அணி 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் வென்றிருந்தது. 20 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. தற்போது இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும் அரையிறுதி சுற்றை 99% எட்டி இருக்கிறது.