2முறை இரட்டை சதம்.. ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு நடந்த சோகம்.. உலக கிரிக்கெட்டில் முதல் முறை

0
1042
Jaiswal

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று டெஸ்டில் விளையாடி உள்ள ஜெயஸ்வால் ஒரு அரை சதம் மற்றும் இரண்டு இரட்டை சதங்கள் உடன் மொத்தம் 545 ரன்கள் குவித்திருக்கிறார்.

மேலும் இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் மிக வேகமாக உஸ்மான் கவஜாவை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் உஸ்மான் கவாஜாவை கடந்து விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

கடந்த வருடத்தின் மத்தியில் ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய டெஸ்ட் அணியில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் வாய்ப்பு ஜெய்ஸ்வாலுக்கு கொடுக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பே மிகவும் அற்புதமாக பயன்படுத்திய ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து முதல் போட்டியிலேயே அசத்தினார். கையில் அருகில் இருந்த இரட்டை சதத்தை அறிமுக போட்டியில் அவர் தவற விட்டிருந்தார்.

இதற்கு சேர்த்து இந்திய மண்ணில் நடைபெறும் இங்கிலாந்து தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்களை பதிவு செய்து, விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.

- Advertisement -

இப்படி இருந்தும் கூட அவருக்கு மட்டும் வினோதமான ஒரு சோகமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இரண்டு முறை இரட்டை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தும் கூட, இரண்டு போட்டிகளிலுமே அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை.

இரண்டாவது டெஸ்டில் அவர் இரட்டை சதம் அடித்திருந்தபொழுது ஆட்டநாயகன் விருது 10 விக்கெட் கைப்பற்றிய பும்ராவுக்கு வழங்கப்பட்டது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அவருடைய பந்துவீச்சுதான் வெற்றிக்கு மிக முக்கியமானதாக கருதப்பட்டது.

இதே போல் தற்பொழுது நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்டில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்திருந்தாலும், முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா உடன் இணைந்து இரட்டை சத பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டு, அத்தோடு சதமும் அடித்து, ஒட்டுமொத்தமாக ஏழு விக்கெட்டும் கைப்பற்றிய ஜடேஜாவை வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததாக ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்கள் அடித்து, தொடர்ச்சியாக அந்த இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது பெறாத ஒரே வீரராக உலக கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் மட்டுமே இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.