2 இலங்கை வீரர்களுக்கு கோவிட் தொற்று உறுதி.. ஆசிய கோப்பை உறுதியாக நடைபெறுமா? பரபரப்பான தகவல்!

0
218
Asia cup

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதை இந்திய அரசும் இந்திய கிரிக்கெட் வாரியமும் விரும்பாத காரணத்தினால், இந்த முறை ஆசியக் கோப்பை தொடரை நடத்த இருந்த பாகிஸ்தான் இலங்கை உடன் சேர்ந்து தொடரை பகிர்ந்து நடத்துகிறது!

ஆசியக் கோப்பை தொடர் இந்த மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி இறுதியில் பாகிஸ்தானில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே துவங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை இரு அணிகளும் இலங்கையில் விளையாடுகின்றன.

- Advertisement -

தற்பொழுது இலங்கையில் லங்கா பிரீமியர் டி20 லீக் நடைபெற்று முடிவுக்கு வந்தது. இதில் ஹசரங்க தலைமையிலான கண்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் அந்தப் போட்டியில் தொடையில் காயம் அடைந்த அவரால் குறைந்தது இரண்டு போட்டிகளிலாவது பங்கேற்க முடியாது என்று தெரிகிறது.

அதே சமயத்தில் லங்கா பிரீமியர் டி20 லீகில் பங்கேற்று காயத்தில் இருந்து திரும்பி வந்து விளையாடிய இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சமீரா ஆசியக் கோப்பை தொடரில் இருந்து மீண்டும் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார்.

இப்படியான இரு முக்கிய வீரர்களின் எதிர்பாராத காயங்கள் ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவை உண்டாக்கி இருந்தது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கை அணிக்கு மேலும் ஒரு பலத்த பின்னடைவாக இலங்கை ஆசியக் கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த குசால் பெரேரா மற்றும் அவிஷ்கா பெர்னாடோ இருவரும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்து அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இவர்கள் இருவரும் மேற்கொண்டு குணமடைவதை பொருத்துதான் ஆசியக் கோப்பை இலங்கை அணியில் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் இலங்கை வீரர்களுக்கு கோவிட் தொற்று உருவாகி இருப்பது, இலங்கையில் வைத்து ஆசிய கோப்பை தொடரை நடத்த முடியுமா? என்பதையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தற்பொழுது இலங்கையில் பெரிய அளவில் கோவில் தொற்று இல்லை என்றாலும் கூட, ஆசிய கோப்பைக்கு அடுத்து இந்தியாவில் பெரிய ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பதால் இதுகுறித்து ஆலோசிகப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது!