3-ல் 2.. 69 ஓவர் 2 விக்கெட்.. இங்கிலாந்து அணியை கரை சேர்த்த ஜோ ரூட்

0
141
Root

இந்திய அணிக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை ஜோ ரூட் சதம் அடித்து காப்பாற்றி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் செஷனில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இந்த நிலையில் ஜோ ரூட் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்சை வைத்துக் கொண்டு இரண்டாவது செஷன் முழுவதும் விக்கெட் தராமல் விளையாடி, 86 ரன்கள் மட்டும் எடுத்து இன்னிங்ஸை ஓரளவு நிலைப்படுத்தினார்கள்.

இதற்கு அடுத்து தொடர்ந்து மூன்றாவது செஷனில் 45 ரன்கள் எடுத்து பென் ஃபோக்ஸ் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டாம் ஹார்ட்லி 13 ரன்களில் வெளியேறினார். இவர்கள் இருவரது விக்கெட்டையும் முகமது சிராஜ் கைப்பற்றினார்.

ஆனாலும் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 31 வது சதத்தை அடித்தார். மேலும் இந்த சதம் அவருக்கு 15 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் கழித்து வந்திருக்கிறது.

- Advertisement -

இவருடன் கடைசியில் ஜோடி சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ராபின்சன் ஆட்டம் இழக்காமல் 60 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் இன்னிங்ஸ்க்கு கடைசி கட்டத்தில் மிக ஒத்துழைப்பு கொடுத்தார்.

இன்று முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 32 ரன்கள் எடுத்திருக்கிறது. 200 ரன்கள் 8 வது கடினம் என்று நினைத்த நிலையில், மேற்கொண்டு இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 300 ரன்களை இங்கிலாந்து கடந்து இருப்பதற்கு முக்கிய காரணமாக ஜோ ரூட் இருந்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் முதல் 21 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, இதற்கு அடுத்து 69 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இருக்கிறது. மேலும் முதல் செசனில் பரிதாபமாக தோற்ற இங்கிலாந்து, அடுத்த இரண்டு செசனையும் அபாரமாக வென்று இருக்கிறது. மூன்று செசனில் இரண்டு செசனை வென்று, முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.

ருக்கிறார். இந்திய அணியின் தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் மூன்று, முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

தற்போது போட்டி நடைபெறும் ராஞ்சி மைதானத்தில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும். அதே சமயத்தில் நான்காவது இன்னிங்ஸில் விளையாட வேண்டிய இந்திய அணிக்கு கடினமாக இருக்கும். எனவே இந்திய அணி தான் விளையாடும் முதல் இன்னிங்ஸில் பெரிய ரன்கள் அடிக்க வேண்டியது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.