1st T20i.. 15 வது ஓவர் வரை பதட்டம்.. நியூசிலாந்துக்கு பயம் காட்டிய யுஏஇ.. இங்க யாரும் சின்னவங்க கிடையாது!

0
2037
UAE

உலகக் கோப்பைக்கு முன்பாக மிக முக்கியமான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் விளையாட இருக்கிறது!

தற்பொழுது இதற்கு முன்னதாக யுனைடெட் அரபு எமிரேடுக்கு சென்றுள்ள நியூசிலாந்து அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்தத் தொடருக்கான முதல் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் துவங்கியது. டாசில் வென்ற யுஏஇ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எதிர்பார்த்ததை விட அவர்களது பந்துவீச்சு செயல்பாடு சிறப்பாக இருந்தது.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் சேட் பவுஸ் ஜுனைட் சித்திக் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார். நியூசிலாந்து அணிக்கு தாக்குப் பிடித்த டிம் ஷெப்பர்ட் 34 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். இறுதியில் கோல் மெக்கோன்ஸி 24 பந்துகளில் 31 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி நிர்ணயித்த 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஜுனைட் சித்திக் மற்றும் பஸில் அகமத் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இலக்கை நோக்கி விளையாடிய யுஏஇ அணிக்கு கேப்டன் முகமது வாசிம் சவூதி வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக அறிமுகமான ஆரியன்ஸ் ஷர்மா மிகச் சிறப்பாக விளையாடி 43 ரன்னில் 60 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த இளம் வீரருக்கு எதிர் முனையில் இருந்து எந்த ஒரு வீரரும் நல்ல ஆதரவை பேட்டிங்கில் தரவில்லை. ஆனாலுமே போட்டியை தான் ஆட்டமிழக்கும் 15ஆவது ஓவர் வரை இவர் கைக்குள் வைத்திருந்தார். பதினைந்தாவது ஓவரில் இவர் ஆட்டம் இழந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சென்று ஆட்டம் நியூசிலாந்து பக்கம் மாறியது.

கடைசி ஐந்து ஓவர்களுக்கு 30 பந்துகளுக்கு 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் ஐந்து விக்கட்டுகளும் அப்போது இருந்தது. முதல் பெரிய வெற்றியை நோக்கி யுஏஇ அணியிருந்தது. ஆனால் அனுபவம் அற்ற இளம் வீரர்கள் தொடர்ச்சியாக வர, அவர்களால் ஆட்டத்தை சிறப்பாக முடிக்க முடியவில்லை.

இறுதியாக 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து யுஏஇ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணிக்கு அபாரமாக பந்து வீசிய கேப்டன் டிம் சவுதி நான்கு ஓவர்களில் 25 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.