1992 உலக கோப்பைக்கு இம்ரான் கான் செஞ்ச அந்த மாஸ் வேலையை ரோகித் செய்யனும்.. தேர்வுக்குழு என்ன சொல்கிறது?

0
977
Rohitsharma

இதுவரை மொத்தம் 12 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த முறை இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 13-வது எடிஷன் ஆகும்!

நடந்து முடிந்துள்ள 12 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இம்ரான் கான் தலைமையில் வென்று அசத்தியது!

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வெற்றிகரமான ஆல்ரவுண்டர் மற்றும் கேப்டனான இம்ரான் கான் இந்த உலகக் கோப்பை தொடரில் மிக தைரியமான ஒரு முடிவை எடுத்து, அந்த முடிவு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

என்னவென்றால், இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டுமே அறிமுகமாகி இருந்த இன்சமாம் உல் ஹக்கை மிகத் தைரியமாக பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் அணிக்கு கேட்டு வாங்கினார் இம்ரான் கான்.

இப்படி இடம் பெற்ற இன்சமாம் உல் ஹக்
மொத்தம் பத்து இன்னிங்ஸ்களில் எடுத்த ரன்கள் 225 மட்டும்தான். ஆனால் அவருக்கு தொடர்ந்து இம்ரான் கான் உலகக் கோப்பையில் வாய்ப்பு தர, அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 37 பந்துகளில் 60 ரன்களும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 35 பந்தில் 42 ரன்களும் இன்சமாம் மிக முக்கியமான நேரத்தில் எடுத்துக் கொடுத்தார். அந்த ரன்கள் பாகிஸ்தான் உலகக் கோப்பையை கைப்பற்ற மிகமுக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

தற்பொழுது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இப்படியானதொரு தைரியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் ரோகித் சர்மா இருக்கிறார். அவருக்கு நம்பர் நான்காம் இடத்தில் விளையாட பேட்ஸ்மேன் மட்டும் தேவையாக இல்லை, கூடவே அவர் இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் நல்லதாக இருக்கும் என்கின்ற சூழல் இருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் உள்நாட்டுப் போட்டிகளில் மூன்று வடிவத்திலும் அற்புதமாக செயல்பட்டு இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் இவர் வலது கையில் ஆப் ஸ்பின் பகுதி நேரமாகவும் வீசக்கூடியவர்.

இந்த நிலையில் இவரை உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்வதற்கு முன்னோட்டமாக ஆசிய கோப்பைக்கான அணியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குரல்கள் முன்னாள் வீரர்கள் இடமிருந்து வர ஆரம்பித்திருக்கின்றன. ரோஹித் சர்மா இம்ரான் கான் போல தைரியமான முடிவை எடுப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் தேர்வுக்கு குழுவுக்கு அழுத்தம் கொடுப்பதும் அவர் கையில்தான் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் தற்பொழுது நான்காவது இடத்தில் விளையாட வாய்ப்பு இருக்கின்ற கேஎல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஷ் இருவரும் காயத்தில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!