கடைசி ஓவருக்கு 19 ரன்.. சிக்கந்தர் ராஸா 9 சிக்ஸர்.. 234 ஸ்ட்ரைக் ரேட்.. ஜிம்பாப்வே திரில் வெற்றி!

0
3547
Raza

தற்பொழுது இந்தியாவில் 10 அணிகள் பங்கு பெற்று விளையாடு வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எனவே தற்போது உலகக் கிரிக்கெட்டில் எந்தவித பரபரப்பான போட்டிகள் இல்லாமல் வெளியில் மிக அமைதியாக இருந்து வருகிறது.

- Advertisement -

தற்போது உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் நெதர்லாந்து அணிக்கு உலக கோப்பைக்கு முன்பாக சர்வதேச ஒருநாள் போட்டிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜிம்பாப்வே நமீபியா நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்து தற்பொழுது கிரிக்கெட் விளையாடி வருகிறது என்பது ஆச்சரியமான ஆனால் நல்ல விஷயம்.

இன்று இந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த நமீபியா மைக்கேல் வான் லிங்கன் 37 பந்தில் 67 ரன்கள், நிக்கோலஸ் டேவின் 44 பந்தில் 60 ரன்கள், ஜெராட் எராஸ்மஸ் 28 பந்தில் 35 ரன்கள், ஜேஜே ஸ்மிட் 11 பந்தில் 25 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் நிக் வெல்ச் 25 (19), இன்னசென்ட் கயா 37 (30), கேப்டன் கிரேக் எர்வின் 10 (12), ரியான் பர்ல் 7 (7), வெஸ்லி மாதவேர் 23 (12), கிளவ் மடண்டே 5* (6) என ரன்கள் எடுத்தார்கள்.

இந்த நிலையில் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு ஜிம்பாப்வே 181 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு ஆறு பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது.

இந்தச் சூழலில் பேட்டிங் முனையில் ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராஸா நின்றிருந்தார். முதல் பந்து டாட்டாக அமைய, அடுத்த பந்து வைடாக வீசப்பட்டது. இதற்கு அடுத்த இரண்டு பந்துகளை ராஸா சிக்ஸர்களுக்கு அனுப்பினார்.

இதற்கு அடுத்து மூன்று பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் ராஸா ஒரு ரன் எடுக்க, ஐந்தாவது பந்தை சந்தித்த பேட்ஸ்மேன் ஒரு ரன் எடுத்தார். இந்த நிலையில் கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட, ராஸா பவுண்டரி அடித்து அணியை திரில் வெற்றி பெற வைத்தார்.

இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று 35 பந்துகளில் 3 பவுண்டரி 9 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் சிக்கந்தர் ராஸா குவித்தார். இவரே இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.