“16 வருஷத்தோட 17வது வருஷம்.. ஆர்சிபி இதுல இன்னும் மாறல திருந்தல!” – ஏபி.டிவில்லியர்ஸ் வேதனை!

0
1826
Devilliers

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே, மும்பை, கேகேஆர் மற்றும் குஜராத் உள்ளிட்ட அணிகள் சிறப்பாக செயல்பட்டன. அணிக்கு என்ன ரோலில் வீரர்கள் தேவையோ, அதனை செய்யக் கூடிய வீரர்கள் தேடி தேடி ஏலத்தில் போராடி வாங்கினார்கள்.

ஆனால் சில அணிகள் ஏலத்திற்கு எந்த நாட்டமும் காட்டாமல் மிக்சர் சாப்பிட்டு கொண்டு, கிடைத்த வீரர்களை வாங்கியது. அந்த பட்டியலில் முதலில் இருக்கும் அணி ஆர்சிபி தான். இத்தனை ஆண்டுகால ஏல வரலாற்றில் ஸ்டார் வீரர்கள் பின்னால் சென்ற ஆர்சிபி அணி, இம்முறை அமைதி காத்தது. அதிகபட்சமாக அல்சாரி ஜோசப்பை ரூ.11.50 கோடி கொடுத்து வாங்கியது.

- Advertisement -

அதேபோல் யாஷ் தயாளை ரூ.5 கோடிக்கும், ஃபெர்குசனை ரூ.2 கோடிக்கும் வாங்கியது. ஆனால் கடந்த சீசனில் ஆடிய ஹசரங்கா விடுவிக்கப்பட்ட நிலையில், அவருக்கான மாற்று வீரரை கடைசி வரை ஆர்சிபி அணி வாங்க முயற்சிக்கவே இல்லை. முஜீப் உர் ரஹ்மானின் பெயர் ஏலத்தில் உச்சரிக்கப்பட்ட போது கூட அதீத மவுனத்துடன் இருந்தது.

குஜராத் அணிக்காக ஆடிய 3 வீரர்களை ஆர்சிபி அணி எடுத்திருந்தாலும், ஆர்சிபி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஆர்சிபி அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசும் போது, கிரிக்கெட்டில் X ஃபேக்டர் ஸ்பின்னர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை ஆர்சிபி அணிக்காக ரஷீத் கானை போன்ற ஒரு மிகச்சிறந்த லெக் ஸ்பின்னர் தேவை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்மிடம் சாஹல் இருந்தார். அவர் விட்டுச்சென்ற இடம் இப்போதும் நிரப்பப்படாமலேயே உள்ளதாக கருதுகிறேன். கடந்த சீசன் முடிவடைந்த பின் ஹசரங்காவையும் ஆர்சிபி அணி நிர்வாகம் விடுவித்தது. தற்போது பெங்களூரு அணியில் ஸ்பின்னர்கள் என்று பார்த்தோமென்றால், கரண் சர்மா மற்றும் ஹிமான்ஷு சர்மா ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

ஆனால் ஆர்சிபி அணிக்கு ஒரே போட்டியில் 4 அல்லது 5 விக்கெட்டுகளை வீழ்த்த கூடிய சிறந்த ஸ்பின்னர் தேவை. குஜராத் அணிக்கு ரஷீத் கான் செயல்படுவதை போன்ற ஒரு ஸ்பின்னர்கள் ஆர்சிபி அணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளார். ஆனால் ஆர்சிபி அணி நிர்வாகம் என்ன திட்டத்துடன் உள்ளது என்று தெரியவில்லை.

ரஷீத் கான் போன்ற ஸ்பின்னரை டிரேட் மூலம் வாங்க முயற்சித்திருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் ரஷீத் கானை டிரேடில் கூட கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு குஜராத் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.