17வருடம்.. 347ரன் வித்தியாச உலகசாதனை.. தீப்தி 9விக்கெட்.. இங்கிலாந்தை வென்றது இந்திய பெண்கள் அணி!

0
999
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் ஒரே டெஸ்ட் போட்டி மட்டும் கொண்ட டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. சதீஷ் சுபா 69, ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 68, யாஷிகா பாட்டியா 67, தீப்தி சர்மா 66 ரன்கள் எடுக்க, இந்தியா முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இங்கிலாந்து அணியின் நாட் சிவியர் பிரண்ட் 59 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் தீப்தி சர்மா ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணி 400 ரன்கள் தாண்டி மிகப்பெரிய இமாலய இலக்கை துரத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அதிரடியாக 131 ரன்களுக்கு சுருட்டி, 347 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் தீப்தி சர்மா நான்கு விக்கெட் கைப்பற்றினார். மொத்தமாக அவர் இந்த டெஸ்ட் தொடரில் 9 விக்கெட் கைப்பற்றி இருக்க, அவர் ஆட்டம் நாயகியாக அறிவிக்கப்பட்டார்.

பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்பொழுது இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிகபட்ச ரன் வித்தியாசமாக பதிவாகி இருக்கிறது.

மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த 17 ஆண்டுகளில் இதுவரை தோல்வி அடைந்ததில்லை என்கின்ற சாதனையையும் தக்க வைத்திருக்கிறது. உலக அளவில் பெண்கள் கிரிக்கெட் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது என்பது நல்ல விஷயம்!