17 வருட டி20 வரலாறு.. இந்தியா பேட்ஸ்மேன்கள் அசத்தல் சாதனை.. அதிரடி ரன் குவிப்பு!

0
10001
ICT

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று திருவனந்தபுரம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா கேப்டன் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார். பனியின் காரணமாக ஆஸ்திரேலியா அணி இந்த முடிவை எடுத்தது.

- Advertisement -

மெதுவான ஆடுகளம் என்பதால் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் முதல் இரண்டு ஓவர்கள் பொறுமையாக ஆரம்பித்தார்கள்.

அதற்குப் பிறகு ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் தெறித்தார். அதற்கு அடுத்து அவர் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து நொறுக்கினார். முடிவில் 24 பந்துகளில் அதிரடியாக ஒன்பது பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ருதுராஜ் உடன் இஷான் கிசான் ஜோடி சேர்ந்து கொஞ்சம் பொறுமையாக ஆரம்பித்தார். 10 ஓவர்கள் தாண்டி ரன் வேகம் குறைவதை கண்ட இஷான் கிஷான் அதிரடியில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடியவர் 30 பந்துகளில் அதிரடியாக அரை சதம் அடித்து, 32 பந்தில் 52 ரன்கள் உடன் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கடுத்து விளையாட வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் அவர் தன் பங்குக்கு பத்து பந்தில் 19 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் திலக் வர்மாவுக்கு பதிலாக இறுதிக்கட்டத்தில் ஃபினிஷர் ரிங்கு சிங் அனுப்பப்பட்டார். இந்த நிலையில் ருத்ராஜ் 43 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

உள்ளே வந்த ரிங்கு சிங் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி வெறும் ஒன்பது பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். திலக் வருமா இரண்டு பந்தில் ஏழு ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது.

17 வருடமாக டி20 கிரிக்கெட் விளையாடி வரும் இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் முதல் மூன்று பேர் அரை சதம் அடித்த நிகழ்வு தற்போதுதான் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.