கயானாவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டு அணிகளும் சேர்த்து ஒரே நாளில் 17 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியை தென்னாபிரிக்க அணி ஏற்கனவே வென்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்னாபிரிக்காவின் கையே சற்று ஓங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது டெஸ்ட் போட்டி கயானாவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 54 ஓவர்களில் 160 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சமார் ஜோசப் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதிகபட்சமாக தென்னாபிரிக்க அணியில் டி பைட் 38 ரன்கள் குவித்தார். இதில் ஒரு ரன்னை தாண்டாமல் ஐந்து பேட்ஸ்மேன்கள் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் நான்கு டக் அவுட்டுகளும் அடக்கம். வெஸ்ட் இண்டீஸ் அணியில் சீல் மூன்று விக்கெட்டுகளும் ஹோல்டர் மற்றும் மோல்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். சிறப்பாக பந்து வீசிய சமாஜ் ஜோசப் 14 ஓவர்களில் நான்கு ஓவர்கள் மெய்டனுடன் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் மிடில் ஆர்டர் வரிசையில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை இவரே கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களும் தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறினார்கள். தொடக்கு ஆட்டக்காரர்களான கேப்டன் பிராத்வெயிட் மூன்று ரன்களிலும், லூயிஸ் ஜீரோ ரன்னிலும் நடையை கட்டினார்கள்.
மூன்றாவது வரிசையில் களமிறங்கிய கார்ட்டி 26 ரன்கள் குவித்து ஓரளவு ஆறுதல் அளிக்க அதற்குப் பிறகும் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விட ஆல் ரவுண்டர் ஹோல்டர் பின்னர் நிலைத்து நின்று 51 பந்துகள் பிடித்து ஆறு பவுண்டரியுடன் 33 ரன்கள் குவித்து களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க:ஐபிஎல்னால இந்தியா தப்பிக்குது.. பிளேயர்ஸ் இப்படி பண்றது தரமான கிரிக்கெட்டை சீக்கிரம் அழிச்சுடும் – பாசித் அலி பேட்டி
இதனால் முதல் நேர ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 28.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் குவித்து இருக்கிறது. ஆல் ரவுண்டர் ஹோல்டர் களத்தில் இருக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவை விட அதிக ரன்கள் முன்னிலை வைக்க முயற்சிக்கும். இன்னும் 63 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளிலும் சேர்த்து ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் இழந்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.






