நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்களான டெவான் கான்வே மற்றும் பின் ஆலன் ஆகியோர் பிரான்சிஸ் கிரிக்கெட் லீக்குகளில் கவனம் செலுத்த நியூசிலாந்து கிரிக்கெட் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து விலகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான பாசித் அலி பிரான்சிஸ் லீக் கிரிக்கெட்டால் சர்வதேச கிரிக்கெட்டின் பாதிப்பு குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
நியூசிலாந்து வீரர்கள் சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து விலகி வருகின்றனர். இதற்கு முன்பாக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஆகியோர் விலகியதை தொடர்ந்து தற்போது பின் ஆலன் ஆகிய நட்சத்திர வீரர்களும் தங்களது ஒப்பந்தத்தில் இருந்து விலகி இருக்கின்றனர்.
ஆண்டு முழுவதும் சர்வதேச கிரிக்கெட் விளையாடி அதிலிருந்து கிடைக்கும் வருவாயை விட குறைந்த மாதங்களிலேயே பிரான்சிஸ் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடி அதிக வருவாயை சர்வதேச வீரர்கள் ஈட்டி வருகின்றனர். இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடும் ஆர்வம் தற்போதுள்ள வீரர்கள் இடையே அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி மட்டும்தான் இதில் விதிவிலக்காக இருக்கப் போகிறது என்றும், மற்ற நாடுகளும் இனி இதை பின்பற்றப் போகின்றன என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நியூசிலாந்து அணிக்காக அடுத்து வரும் இலங்கைத் தொடரில் விளையாட போவது இல்லை என்று கான்வே கூறியிருக்கிறார். இது நியூசிலாந்து அணியின் பிரச்சனையாக இருக்கப்போவதில்லை. இனி வரும் காலங்களில் மற்ற அணிகளும் இதே பிரச்சினையை சந்திக்கப் போகிறது.பாகிஸ்தான் வீரர்களும் இதையே செய்வார்கள். ஏனென்றால் பிரான்சிஸ் கிரிக்கெட் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது.
இது பிரான்சிஸ் கிரிக்கெட்டின் காலமாக இருப்பதால் இந்த சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். இதில் இந்தியா மட்டும் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரை தவிர வேறு எந்த பிரான்சிஸ் கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை. வரும் காலங்களில் டி20 தொடர் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் கிரிக்கெட்டை, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டை இது அழித்துவிடும்.
இதையும் படிங்க:டிராவிட் மகன் அணி வெற்றி.. 10வது இடத்தில் வந்து ஆர்சிபி வீரர் காட்டடி.. மகாராஜா டி20 டிராபி 2024
நீண்ட இன்னிங்ஸ் விளையாடும் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு இது நிச்சயமாக விஷம்தான். டி20 கிரிக்கெட்டால் இந்தியாவைத் தவிர பல நாடுகள் பாதிக்கப்படும். பணம் வெல்லும், கிரிக்கெட் தோற்கும் என்று கூறியிருக்கிறார். சர்வதேச அணிக்காக விளையாடுவதை விட பிரான்சிஸ் லீக் தொடர்களில் விளையாடும் பழக்கம் தற்போது வீரர்களுடைய அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.






