அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

0
5752
ICT

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியில் தற்பொழுது விளையாடி வருகிறது!

இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணிஅறிவிக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது அடுத்த இரண்டு ஆட்டங்களுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் ஆட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட அந்த அணியே இரண்டாவது ஆட்டத்திலும் தொடர்கிறது!

- Advertisement -

முதல் இரண்டு ஆட்டங்களில் இடம்பெறாத இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா அடுத்த இரண்டு ஆட்டங்களுக்குமான இந்திய அணியிலும் தேர்வாகவில்லை. அதே சமயத்தில் அவரது காயத்தின் தன்மை குறித்து இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து எந்த வெளிப்படையான அறிவிப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு ஆட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா துணை கேப்டன் கே எல் ராகுல் இந்த ஆட்டத்திலும் அதே பொறுப்புகளில் தொடர்கிறார்கள். இரண்டு ஆட்டத்திலும் சரியாக செயல்படாத கே எல் ராகுல் நீக்கப்படுவாரா என்றிருந்த நிலையில், அவர் அணியில் தொடர்வதோடு துணை கேப்டனாகவும் தொடர்கிறார்.

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபிக்கான மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிக்கான இந்திய அணி!

- Advertisement -

ரோகித் சர்மா ( கேப்டன்)
கே.எல்.ராகுல் (துணை கேப்டன் )
கே.எஸ். பரத் ( விக்கெட் கீப்பர் )
இசான் கிஷான் (விக்கெட் கீப்பர் )
சுப்மன் கில்
செதேஸ்வர் புஜாரா
விராட் கோலி
ஸ்ரேயாஷ் ஐயர்
சூரியகுமார் யாதவ்
ரவீந்திர ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வின்
அக்சர் படேல்
குல்தீப் யாதவ்
முகமது சிராஜ்
முகமது சமி
ஜெயதேவ் உனட்கட்
உமேஷ் யாதவ்

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் நடந்து முடிந்திருக்கும் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளில் தற்பொழுது இருக்கிறது. இந்த காரணத்தால் மேற்கொண்டு இருக்கும் அணியில் எந்த மாற்றமும் வேண்டாம் என்று இந்திய அணி நிர்வாகம் கருதி இருப்பதால் மாற்றங்கள் எதுவும் இல்லை!