16 வருட ஐபிஎல் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்த விராட் கோலி!

0
451
Viratkohli

பதினாறாவது ஐபிஎல் சீசன் போட்டியில் இன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் பெங்களூர் மைதானத்தில் மோதி வருகின்றன!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற லக்னோ அணி கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இரண்டு அணியிலும் சில மாற்றங்கள் இருந்தன.

- Advertisement -

பெங்களூர் அணிக்கு துவக்கம் தர கேப்டன் பாப் டு ப்ளிசிஸ், விராட் கோலி இருவரும் களம் புகுந்தார்கள். இந்த முறை மாற்றமாக முதலில் அதிரடியான தாக்குதலை விராட் கோலி தொடுக்க ஆரம்பித்தார்.

அவரது பேட்டில் இருந்து பந்துகள் தெறித்தன. அவர் விளையாடிய ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு கிளாசிக்காக இருந்தது. பவர் பிளேவின் இறுதி ஓவருக்கு கொண்டுவரப்பட்ட அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் பந்துவீச்சில் அனாயசமாக அவர் அடித்த பவுண்டரியும் சிக்ஸரும் பெங்களூரு அணியின் ரசிகர்களை மைதானத்தில் கூத்தாட வைத்தது.

மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது 51 வது ஐபிஎல் அரை சதத்தை இன்று நிறைவு செய்தார். மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 61 ரன்களை தலா நான்கு பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் உடன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

விராட் கோலி அடித்த இந்த அரைசதத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு வித்தியாசமான சாதனையை அரை சதம் அடித்ததில் படைத்திருக்கிறார். அது என்னவென்றால் விராட் கோலி இதுவரை ஐபிஎல் தொடரில் தனது அணி இல்லாமல் பங்கேற்ற 14 அணிகளுக்கு எதிராக விளையாடி அதில் 13 அணிகளுக்கு எதிராக அரை சதத்தை அடித்திருக்கிறார். கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக மட்டும் அவர் அரை சதம் அடிக்கவில்லை.

இவருக்கு அடுத்த இடத்தில் 12 அணிகளுக்கு எதிராக அரை சதம் அடித்தவர்களாக டேவிட் வார்னர், சிகர் தவான், கௌதம் கம்பீர் ஆகியோர் இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஒரே ஒரு வலது கை பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது!