“152/0.. மறந்து போச்சா?” – கங்குலிக்கு வக்கார் யூனுஸ் பதிலடி!

0
476
Ganguly

இந்திய அணி இந்த ஆண்டில் குறைந்தபட்சம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான்கு ஆட்டங்களில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது!

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆசிய கோப்பைத் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடத்தப்படுகிறது. இதில் முதல் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதோடு இரண்டாவது சுற்றிலும் இந்திய அணி விளையாடுவது ஏறக்குறைய உறுதி. இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் மூன்றாவது முறையும் மோதும்.

- Advertisement -

மேலும் உலக கோப்பையின் லீக் சுற்றில் ஒரு போட்டியில் மோத இருக்கின்றது. எனவே இந்த ஆண்டில் நான்கு முறை இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பாகிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பையில் இந்திய அணி எப்பொழுதும் ஒருதலைப் பட்சமாகவே வென்றிருக்கிறது, எனவே இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டிதான் தரத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

கங்குலியின் இந்தக் கருத்து பாகிஸ்தான் தரப்பை மிகவும் கோபப்பட வைத்திருந்தது. பல முன்னாள் வீரர்கள் கங்குலியின் இந்த கருத்துக்குத் தங்களது எதிர்ப்புகளை அப்போதே பதிவு செய்திருந்தனர். தற்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “கங்குலியின் கருத்தை பற்றி நான் பதில் சொல்ல விரும்பவில்லை. உலகக் கோப்பையில் இந்திய அணி உடன் நாங்கள் நல்ல ஆட்டங்களில் இருந்ததாக நான் நினைக்கிறேன். நடந்து முடிந்த 2021 டி20 உலக கோப்பையில் நாங்கள் இந்தியாவை ஒரு தலைபட்சமாக வென்றோம். ஆனால் நாங்கள் தோற்ற போட்டிகள் எல்லாமே மிக நெருக்கமாக வந்துதான் தோற்றோம்.

எனவே இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகள் குறித்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டி தான் உலகிலேயே மிகவும் பெரிய போட்டி. விளையாட்டின் அளவு இப்படி பெரியதாக இருக்கும் பொழுது இங்கு யாருடைய கருத்துக்களும் முக்கியம் கிடையாது!” என்று தடாலடியாக கூறியிருக்கிறார்!