“14 பந்து 47 ரன்.. ஹாரிஸ் ரவுப் ஒப்பந்தத்தை மீறிட்டார்.. அதான் அதிரடியா ஆடினேன்” – பின் ஆலன் பேச்சு

0
365
Allen

பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவுக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மூன்று வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார்.

இதற்கு அடுத்து பாகிஸ்தான் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு ஷாகின் ஷா அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவருடைய தலைமையில் முதல்முறையாக நியூசிலாந்து நாட்டில் அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு போட்டிகளையும் முதலில் பேட்டிங் செய்து நியூசிலாந்து அணி அபாரமான முறையில் வென்றது. தொடரில் வலுவான முன்னிலையை பெற்றது.

இந்த நிலையில் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற போட்டியிலும் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்து, நியூசிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய அனுமதித்தது.

இதை பயன்படுத்திக் கொண்ட நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் வெறும் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள் மட்டும் அடித்து விட்டு, பதிலுக்கு 16 சிக்ஸர்கள் நொறுக்கித் தள்ளி, ஒட்டுமொத்தமாக 1:37 ரன்கள் குவித்து மிரட்டி விட்டார். இதில் ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் 14 பந்துகள் மட்டும் சந்தித்து 47 ரன்கள் அடித்தார். மேலும் அவரது ஒரே ஓவரில் 27 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இவரது அதிரடியின் காரணமாக நியூசிலாந்து 224 ரன்கள் சேர்த்தது. இதற்கு அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணியால் 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து மீதம் 2 போட்டிகள் வைத்தே கைப்பற்றி விட்டது.

ஆட்டநாயகன் விருது பெற்ற பின் ஆலன் பேசும்பொழுது “தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஹாரிஸ் ரவுப் எனக்கு எதிராக எந்த பவுன்சரையும் வீச மாட்டேன் என்றும், நான் அவரைத் திருப்பி அடிக்க மாட்டேன் என்றும் ஒரு ஒப்பந்தம் இருந்தது. ஆனால் இன்று அவர் அதை மீறி எனக்கு ஒரு பவுன்சரை வீசினார். அதனால்தான் அடித்து விட்டேன். ( சிரிக்கிறார்)

எங்களுக்கு தெரிந்த சூழ்நிலையில் நாங்கள் விளையாடுகிறோம். இதனால் இந்த விக்கெட்டை நானும் டிம் செய்பர்டும் மதிப்பீடு செய்தோம். நல்ல கிரிக்கெட் ஷாட் விளையாடினால் ரன்கள் வரும் என்று முடிவு செய்தோம்.

நான் என்னுடைய பேட்டிங் விஷயங்களை மிகவும் எளிமையாக வைத்திருக்கிறேன். தொடர் முழுவதும் நான் என்னுடைய பேட்டிங்கில் கடுமையாக உழைக்கிறேன். மேலும் ஒரே விளையாட்டு திட்டத்துடன் விளையாடச் செல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.