139 ஆண்டு கால ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வருகிறது மாற்றம் – கெவின்  பீட்டர்சன் தகவல்!

0
59
KP

கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் தான் மரபான கிரிக்கெட். இந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஆஷஸ் டெஸ்ட் சீரிஸ் உலகப் புகழ் பெற்றது. இந்த இரு நாடுகளுக்கு இடையே இந்த டெஸ்ட் தொடர் நூத்தி முப்பத்தி ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிகளுக்கு கிரிக்கெட் உலகில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ அதே அளவிற்கு இந்த இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடருக்கும் இருக்கும். இந்தத் தொடரை கைப்பற்றுவதை ஒரு பிரச்சனையாகவே இரு அணிகளும் கருதும்.

- Advertisement -

கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் சீரிசில் 4-0 என இங்கிலாந்து அணி தோற்று வெறுங்கையோடு நாடு திரும்பியது. இந்த முறை ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்து வந்து விளையாட இருக்கிறது. இந்த ஆஷஸ் தொடரில் தான் இதுவரை நூத்தி முப்பத்தி ஒன்பது ஆண்டு காலமாக ஆஷஸ் தொடரில் நடக்காத ஒரு விஷயம் நடக்கப் போகிறது என்று இங்கிலாந்து அணியில் பிரபல முன்னாள் வீரர் பீட்டர்சன் தெரிவித்திருக்கிறார். அது என்னவென்றால் இந்த முறை ஆகஸ்ட் மாதம் ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடக்காது என்பதுதான்.

ஏன் இத்தனை ஆண்டுகால வழக்கத்தை மாற்றுகிறார்கள் என்றால் இங்கிலாந்தில் 100 பந்து போட்டி என்ற ஒரு உள்நாட்டு தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. இந்தத் தொடரும் இதே ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் நடப்பதால், இங்கிலாந்து தேசிய அணிக்காக விளையாடும் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதால், இந்தத் தொடரில் பங்கேற்க முடியாமல் போகிறது. இதனால் ஆகஸ்ட் மாதங்களில் டெஸ்ட் தொடர் இல்லாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிடுகிறது.

தொடரில் இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடக்கும் 100 பந்து தொடரில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர்கள் பங்கேற்க முடியும். தற்போது நடந்து வரும் 100 பந்து தொடரில், உள்நாட்டில் சவுத்ஆப்பிரிக்கா அணியோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் பென் ஸ்டோக்ஸ் ஜானி பேர்ஸ்டோ போன்ற நட்சத்திர வீரர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிக்பாஸ் லீக் இவர்களுக்காக சர்வதேச கிரிக்கெட் அட்டவணை மாற்றப்படுகிறது. மேலும் இந்தத் தொடர்களுக்கு பெரிய அளவில் வரவேற்பும் இருக்கிறது. இந்த தொடர்களின் பட்டியலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் 100 பந்து தொடரும் எதிர்காலத்தில் இடம்பெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. இதனால் இந்தத் தொடரில் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் விதமாக இனி ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதவாறு அட்டவணை அமைக்கப்படும்.

மேலும் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் ஆஷஸ் தொடரில் ஆகஸ்ட் மாத டெஸ்ட் போட்டி இல்லாமல் போவது இரு அணிகளுக்கும் ஏன் நல்ல விஷயம்தான் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்தச் சமயத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை விட இரு அணிகளும் வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடுவது உலக கோப்பைக்கு தயாராவதற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.