139 ரன்.. 9 விக்கெட்.. இங்கிலாந்தை சுருட்டிய இந்திய அணி.. போட்டியை மாற்றிய பும்ரா

0
403
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் தனது அற்புதமான பந்துவீச்சின் மூலமாக போட்டியை இந்தியா பக்கம் திருப்பி இருக்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா.

நேற்று முதல் நாளில் ஆறு விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி இன்று தொடர்ந்து விளையாடி 396 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்தியா அணிக்கு பேட்டிங்கில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தினார். இங்கிலாந்தின் பந்துவீச்சில் ஆண்டர்சன், ரேகான் அகமத் மற்றும் சோயப் பஷீர் மூவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

போட்டி நடைபெற்றுக் கொண்டு வரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால், இந்திய அணி 60 ரன்கள் குறைவாக எடுத்திருப்பதாகவும், இங்கிலாந்து அதிரடியாக விளையாடுகின்ற காரணத்தினால் இந்தியாவிற்கு நெருக்கடி உண்டாகும் என்றும் கூறப்பட்டது.

இதற்கு ஏற்றபடியே இங்கிலாந்து தனது முதல் இன்னிசை அதிரடியாக துவங்கியது. முதல் விக்கெட்க்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில், பென் டக்கெட் 21 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ஜாக் ரவுடி 78 பந்தின் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் மேஜிக் ஆரம்பித்தது. பும்ராவின் பந்துவீச்சில் ஜோ ரூட் 5, போப் 21, ஜானி பேர்ஸ்டோ 25, பென் ஸ்டோக்ஸ் 47, டாம் ஹார்ட்லி 21, ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 ரன்கள் என பும்ரா 45 ரன்கள் மட்டும் கொடுத்து ஆறு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியாக 55.5 ஓவரில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 114 ரன்களுக்கு ஒரு விக்கெட் என இருந்த இங்கிலாந்து, மேற்கொண்டு 139 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கொடுத்திருக்கிறது. இந்திய அணியின் தரப்பில் பும்ரா 6 குல்தீப் யாதவ் 3, அக்சர் படேல் 1 விக்கெட் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து அணி 143 ரன்கள் பின்தங்கியது.

இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஐந்து ஓவர்களை சந்தித்து விக்கெட் இழப்பில்லாமல் 28 ரன்கள் எடுத்திருக்கிறது. ஜெய்ஸ்வால் 15, ரோஹித் சர்மா 13 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி தற்பொழுது 171 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க : கபில்தேவ் இம்ரான் கான் ரெக்கார்ட் பிரேக்.. பும்ரா புதிய 2 சாதனைகள்.. தெறி பவுலிங்

நாளை தொடர்ந்து நடைபெறும் ஆட்டத்தில் முழுமையாக இந்திய அணி விளையாடினால், இந்திய அணி வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு. நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் பேட்டிங் செய்வது சுலபமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.