13 உலக கோப்பையில் யாரும் செய்யாத மாஸ் சம்பவம்.. ஆஸ்திரேலியா மெகா உலக சாதனை.. சிக்கிய நியூசிலாந்து!

0
453
Australia

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் அதிரடியாக முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள்.

- Advertisement -

டேவிட் வார்னர் 65 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 59 பந்துகளில் சதம் அடித்து, 67 பந்துகளில் 10 பவுண்டரிகள் ஏழு சிக்ஸர்கள் உடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஒரு கட்டத்தில் 400 ரன்களை கடந்து ஆஸ்திரேலியா அணி புதிய சாதனையை உலகக் கோப்பையில் படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்திற்கு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பான முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள்.

மார்ஸ்36, ஸ்மித் 18, லபுசேன் 18, மேக்ஸ்வெல் 41, இங்லீஸ் 38, கம்மின்ஸ் 37, ஸ்டார்க் 1 ஆடம் ஜாம்பா 0, ஹேசில்வுட் 0* என ரன்கள் எடுக்க 49.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி கடைசி மூன்று போட்டிகளில் 350 ரன்களை தாண்டி அடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில், இதுவரை எந்த ஒரு அணியும் தொடர்ச்சியாக 350 ரண்களுக்கு மேல் மூன்று முறை அடித்ததில்லை. இந்த வகையில் ஆஸ்திரேலியா உலகச்சாதனை படைத்திருக்கிறது.

பாகிஸ்தான் – 367/9
நெதர்லாந்து – 398/8
நியூசிலாந்து – 388/10

இன்று நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலிய வீழ்த்துவது மூலம் அரையிறுதி வாய்ப்பை வலிமையாக்கும். மேலும் அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.