2023 ஓடிஐ உலக கோப்பை இந்திய அணிக்கு தேர்வாகும் 13 வீரர்கள்! மீதி இரண்டு இடங்களுக்கு யார்?!

0
5632
ICT

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தவறான முறையில் பரிசோதனைகளை மேற்கொண்டு இருந்திருந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் தைரியமான முடிவுகளை எடுத்து சில விடைகளைக் கண்டறிந்து இருக்கிறார்கள்.

இரண்டாவது போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் வெளியே அமர வைத்து இந்திய அணி தோல்வி அடைந்திருந்த பொழுதும், மூன்றாவது போட்டிக்கும் அவர்களை வெளியில் அமர வைத்து, சஞ்சு சாம்சனுக்கு விடாமல் இரண்டு வாய்ப்பு தந்தது மிக நல்லதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பும் பொழுது, அவர் முதல் விக்கெட் கீப்பராக இருப்பார். எனவே இரண்டாவது விக்கெட் கீப்பர் யார்? என்ற பெரிய கேள்வி இருந்தது. தற்பொழுது அந்த இடத்திற்கு இரண்டாவது விக்கெட் கீப்பராகவும், மூன்றாவது துவக்க ஆட்டக்காரராகவும் இஷான் கிஷான் சந்தேகத்திற்கு இடமின்றி தேர்வாகி இருக்கிறார்.

மேலும் இந்திய உலகக் கோப்பை அணிக்கு பும்ரா, சமி, சிராஜ் இவர்களுடன் நான்காவது வேகப் பந்துவீச்சாளர் யார்? என்கின்ற கேள்வியும் இருந்தது. தற்பொழுது அந்த இடத்திற்கு சர்துல் தாகூர்தான் என்பதும் உறுதியாகி இருக்கிறது. மேலும் அவர் பேட்டிங்கும் செய்வார் என்பது, இந்திய அணிக்கு நல்ல விஷயம்.

இந்தத் தொடரில் விடை கண்டறிய முடியாத ஒரு கேள்வியாக இருப்பது, இந்திய உலகக்கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து திரும்ப வராவிட்டால், நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வது யார்? என்பதுதான். தற்பொழுது இந்த இடத்திற்குதான் சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் போட்டியிட்டு வருகிறார்கள். அனேகமாக இதற்கான விடை அடுத்து நடக்க இருக்கின்ற ஆசியக்கோப்பையில் வந்துவிடும் என்று தெரிகிறது.

- Advertisement -

2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்ற 13 வீரர்கள் யார் என்று இந்தச் சிறிய கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்கலாம். 15 பேர் கொண்ட அணிக்கு மீதம் இருக்கின்ற இரண்டு இடங்களுக்குதான் யார் என்ற தேடல் நடக்க இருக்கிறது. மற்றபடி இந்திய அணிக்காக வருகின்ற உலகக் கோப்பையில் நாம் பார்க்க இருக்கும் 13 பேர் நிச்சயம் இருப்பார்கள்.

பேட்ஸ்மேன்கள் :
சுப்மன் கில், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி.

விக்கெட் கீப்பர்கள் :
இஷான் கிஷான் மற்றும் கே.எல்.ராகுல்.

சுழற் பந்துவீச்சாளர்கள் :
ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாகல்.

வேகப்பந்துவீச்சாளர்கள் :
ஜஸ்ட்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சர்துல் தாகூர்.

இந்த 13 பேர் தவிர்த்து மற்ற இரண்டு இடங்களுக்கு சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஸ்வின், திலக் வர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. வெளியிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள்படி, இந்த 13 பேர் வருகின்ற உலகக் கோப்பை இந்திய அணியில் கட்டாயம் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது!