13 பவுண்டரி.. 4 சிக்ஸர்.. குசால் மெண்டிஸ் அதிவேக சத சாதனை.. பாகிஸ்தானை உலக கோப்பையில் பந்தாடும் இலங்கை!

0
6125
Mendis

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. ஒரு போட்டியில் காலை முதல் தரம்சாலாவில் இங்கிலாந்து பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன.

இன்னொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

இலங்கைக்குத் துவக்க ஆட்டக்காரராக வந்த குசால் பெரேரா 4 பந்துகள் சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இலங்கை அணிக்கு ஆரம்பமே மோசமாக இருந்தது.

இதற்கு அடுத்து இலங்கை வீரர்கள் அது குறித்து எந்தவித கவலையும் படாமல் அதிரடியாக தைரியமாக விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா அரை சதம் அடித்து, 61 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஒரு முனையில் கடந்த போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ், இந்த முறையும் அதிரடியில் பட்டையைக் கிளப்பினார். அவர் சூழ்நிலையை பற்றி எந்த கவலையும் படவில்லை.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் கடந்து மிக வேகமாக சதம் நோக்கி முன்னோக்கி சென்றார். இறுதியாக 65 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் சதம் அடித்து அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் இலங்கை தரப்பில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இது பதிவாகியது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய குசால் மெண்டிஸ் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 122 ரன்கள் குவித்து ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தற்போது இலங்கை அணி 29 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் இலங்கை அதிக ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணி தோல்வி அடையும் என்றால், நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியாமல் வெளியேறவும் செய்யலாம்.