13 பவுண்டரி 13 சிக்ஸர் குட்டி ஏபிடி அசுர ஆட்டம்; குருநாதர் ஏபிடி ஆச்சரிய பாராட்டு!

0
42002
ABD

தற்பொழுது தென்னாபிரிக்காவில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான உள்நாட்டு அணியான டைட்டன்ஸ் அணிக்கு விளையாடி வரும் குட்டி ஏபிடி டிவால்ட் பிரிவிஸ் அசுர ஆட்டம் ஒன்றை ஆடியிருக்கிறார்!

டைட்டன்ஸ் அணி இன்று நைட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நைட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் இந்த முடிவை எடுத்ததற்காக அந்த அணியினர் மொத்த பேரும் வருத்தப்பட்டு இருப்பார்கள்.

- Advertisement -

டைட்டன்ஸ் அணிக்கு துவக்க வீரராக களம் இறங்கிய குட்டி ஏ பி டி என்று செல்லமாக அழைக்கப்படும் டிவால்ட் பிரிவிஸ் 57 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 13 சிக்ஸர்களுடன் 162 ரன்கள் விளாசி அசுர ஆட்டம் ஆடினார். இவரைப் பந்து வீசிய எந்த பந்துவீச்சாளர்களாலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்த ஆட்டத்தில் சொல்லவே தேவையில்லை டைட்டன்ஸ் அணிதான் வெற்றி பெற்றது.

இவர் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்காக களம் இறங்கி ஒரு சதம் மற்றும் சில அரை சதங்களை அடித்து பிரமாதப்படுத்தினார். குறிப்பாக இவர் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்தால், அச்சு அசலாக ஏபி டி வில்லியர்ஸ் விளையாடுவது போலவே இருக்கும்.

இவரது இந்த தனித்தன்மையின் காரணமாக ஐபிஎல் தொடர் மெகா ஏலத்தில் 3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. சில குறிப்பிட்ட ஆட்டங்களை இவர் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு இவரது ஆட்டம் இன்னும் மெருகேறி இருக்கிறது.

- Advertisement -

இவரது இந்த ஆட்டத்தை பார்த்த இவரது குருநாதர் ஏபி டிவிலியர்ஸ் ட்விட்டரில் “டிவால்ட் பிரிவீஸ் என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை ” என்று வியந்து புகழ்ந்து இருக்கிறார். இவரது இந்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்திருக்கும்!