117ரன் 13சிக்ஸ் 4விக்கெட்.. யார் இந்த அர்சின் குல்கர்னி?.. ஐபிஎல் ஏலத்தில் கொட்ட இருக்கும் கோடிகள்!

0
1425
Arsin

ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் என்கின்ற புதிய விதி இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. ஒரு வீரர் இந்திய வீரர் இன்னொரு இந்திய வீரருக்கு பதிலாக உள்ளே வந்து விளையாடலாம்.

இதன் காரணமாக ஆல்ரவுண்டர்கள் தேவை பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் குறைந்துவிட்டது. இது இந்திய கிரிக்கெட்டை பின்னடைவுக்கு உள்ளாக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

காரணம், பொதுவாக இந்திய கிரிக்கெட்டில் தற்போது குறிப்பாக வேத பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவை எப்பொழுதும் இருந்து வருகிறது. மற்ற வடிவ கிரிக்கெட்டில் இல்லை என்றாலும் கூட டி20 கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட்டுக்கு இது மிகவும் முக்கியம். எனவே இந்த இம்பேக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என்று பல இந்திய முன்னாள் வீரர்கள் கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் 18 வயதான மகாராஷ்டிராவை சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சு ஆல் வுண்டர் அர்சன் குல்கர்னி மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய இளைஞராக இருக்கிறார். இவர் மகாராஷ்டிரா அணிக்காக ருத்ராஜ் உடன் இணைந்து விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் மகாராஷ்டிரா பிரிமியர் டி20 லீக்கில் ஈகிள் நாசிக் டைட்டன்ஸ் அணிக்காக, ருத்ராஜ் கேப்டனாக வழிநடத்திய புனேரி பப்பா அணிக்கு எதிராக, 53 பந்துகளில் அதிரடியாக நான்கு பவுண்டரி மற்றும் 13 சிக்ஸர்களுடன் 117 ரன்கள் குவித்தார். மேலும் பந்துவீச்சில் நான்கு ஓவர்களுக்கு 21 ரன்கள் மட்டும் தந்து, நான்கு விக்கெட் கைப்பற்றி அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் தற்பொழுது இந்திய அண்டர் 19 அணியில் துவக்க ஆட்டக்காரராக இடம் பெற்று விளையாடுகிறார். இவரிடம் சிக்ஸ் அடிக்கும் எபிலிட்டியும், வேகப்பந்துவீச்சு திறனும் சேர்ந்து இருக்கிறது. எனவே குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட்டில் இவருக்கான மதிப்பு மிக அதிகம்.

நடக்க இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் இந்த வீரருக்கான போட்டி மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து விலகி இருக்கும் நேரத்தில், அவரைப் போலான இந்த இளைஞரை வாங்க குஜராத் பெரிய ஆர்வம் காட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயத்தில் இப்படியான இளைஞர்களை வாங்கி வளர்த்துவதை வாடிக்கையாக வைத்திருக்கும் மும்பை தைரியமாக இந்த இளைஞர் மேல் போனாலும் போகலாம். ஆல்ரவுண்டர்களை அதிகம் நம்பி விளையாடும் சிஎஸ்கே வாங்கினாலும் வாங்கலாம். இந்த மூன்று அணிகளில் யார் வாங்கினாலும் இந்த இளைஞருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது!