மும்பை இந்தியன்ஸ் கழட்டிவிட்ட 11 வீரர்கள்.. நட்சத்திர வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. தைரியமான முடிவு!

0
23400
MI

2024 அடுத்த வருடம் 17ஆவது ஐபிஎல் சீசனுக்கு மினி ஏலம் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது.

இதற்காக வீரர்களை நீக்குவது மற்றும் பரிமாறிக் கொள்வது போன்றவற்றுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று கடைசி நாளாக அறிவித்திருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக 10 அணிகளும் நான்கு மணியிலிருந்து தக்கவைக்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் கொண்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னுடைய முதல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்படுகிறார் என்கின்ற செய்தி இரண்டு மூன்று நாட்களாக இணையத்தை சுற்றி வந்தது.

இந்த நிலையில் இந்த இரு அணிகள் எந்த மாதிரியான அணி அறிவிப்பை வெளியிட இருக்கிறது என்பது குறித்து ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் உற்சாகமான எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தக்கவைத்துக் கொண்டது. மேலும் மும்பை இந்தியன் அணி இந்த முறை மொத்தம் 11 வீரர்களை வெளியேற்றி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற்றிய 11 வீரர்களில் ஆறு வெளிநாட்டு வீரர்களும் ஐந்து இந்திய வீரர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு வெளிநாட்டு வீரர்களில் மிக முக்கியமாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரை அதிரடியாக மும்பை கழட்டிவிட்டு இருக்கிறது.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மும்பை வான்கடே ஆடுகளத்தில் ஜஸ்பிரித் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் இருவரும் இணைந்து பந்து வீசுவது குறித்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கனவு கண்டு வந்தார்கள். இந்த நிலையில் அது முடிவுக்கு வந்திருக்கிறது.

மும்பை இந்தியன் சனி இந்திய வீரர்களான முகமத் அர்ஷத் கான், சந்தீப் வாரியர், ஹிர்திக் சோக்கின், ரமன் தீப் சிங், ராகவ் கோயல் மற்றும் வெளிநாட்டு வீரர்களான ஜோப்ரா ஆர்ச்சர், ரயிலி மெரிடித், டிரிஸ்டன் டஸ்ப்ஸ், டியோன் யான்சன், ஜய் ரிச்சர்ட்சன், கிரீஸ் ஜோர்டான் ஆகிய 11 வீரர்களை வெளியேற்றி இருக்கிறது.