11 பவுண்டரி.. 7 சிக்ஸ்.. பிரித்வி ஷா மீண்டும் இங்கிலாந்தில் அதிரடி சதம்.. இந்திய அணி கதவுகளை உடைக்கும் திட்டம்!

0
1795
Prithvi

இந்திய கிரிக்கெட்டின் ஜூனியர் சேவாக் பிரத்வி ஷா தற்பொழுது இங்கிலாந்து கவுண்டி அணியான நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி, தற்பொழுது நடந்து வரும் ஒன் டே கப் ட்ராபிக்காக விளையாடி வருகிறார்!

இதற்கு முன்பு இந்த அணிக்காக கடந்த போட்டியில் சோமர்செட் அணிக்கு எதிராக 153 பந்துகளில் 244 ரன்கள் குவித்து, இந்தியர் ஒருவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்து மைதானத்தில் அடித்த அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார்.

- Advertisement -

இன்று இவரது அணி டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்ஹாம் அணிக்கு எந்த ஒரு பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று அரைசதம் கூட அடிக்கவில்லை.

இந்த நிலையில் அந்த அணி 43.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லியாம் 37 ரன்கள் எடுத்தார். நார்த்தாம்டன்ஷைர் அணியின் தரப்பில் லியூக் புரக்டர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை நோக்கி துவக்க வீரராக களம் இறங்கிய பிருத்வி ஷா இந்தப் போட்டியிலும் தனது சேவாக் மாதிரியான அதிரடி பேட்டிங் ஸ்டைலை மீண்டும் வெற்றிகரமாக செயல்படுத்தினார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் பவுண்டரி எல்லைக்கு காற்றிலும் தரையிலும் பறந்தன.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தை அடித்தார். இந்தச் சதம் அவருக்கு 68 பந்துகளில் வந்தது. மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 76 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 125 ரன்கள் குவித்தார்.

இறுதியாக நார்த்தாம்டன்ஷைர் அணி 25.4 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு அறிமுகமான பொழுது எப்படி தெரிந்தாரோ அதேபோல் தற்பொழுது இங்கிலாந்தில் சூறாவளியாக பேட்டிங் செய்து வருகிறார் குட்டி சேவாக் பிருத்வி ஷா!

இந்திய அணியில் தற்பொழுது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் துவக்க இடத்திற்கு மட்டும் ரோகித் சர்மா, கில், ஜெய்ஸ்வால், இஷான் கிஷான், ருதுராஜ் என ஐந்து வீரர்கள் இருக்கிறார்கள். எனவே தற்பொழுது 15 பேர் கொண்ட இந்திய அணியின் பக்கமாக வரவேண்டும் என்றாலும், ஏதாவது பெரியதாக செய்தால்தான் உண்டு. இல்லையென்றால் இந்திய அணியின் பக்கமே வர முடியாத நிலைமை தான் இருக்கிறது. தற்பொழுது இரட்டை சதம் மற்றும் தொடர்ச்சியாக சதம் என்று பிரித்வி ஷா விளையாடி வருவது அவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறியாக தெரிகிறது!