11பவுண்டரி.. 12சிக்ஸர்.. 56பந்தில் ரியான் பராக் ருத்ரதாண்டவம்.. 2024 ரஞ்சி டிராபி!

0
339
Parag

2024-25 ஆண்டுக்கான இந்திய உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபி சில நாட்களுக்கு முன்பு துவங்கி தற்பொழுது நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கு பெறுகின்றன. எலைட் பிரிவில் 32 அணிகளும், பிளேட் பிரிவில் ஆறு அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

- Advertisement -

38 அணிகள் பங்குபெறும் 19 போட்டிகள் தற்பொழுது நடைபெற்று அதில் சில போட்டிகளுக்கு முடிவு வந்திருக்கிறது. இதில் சட்டீஸ்கர் மற்றும் அசாம் மாநில அணிகள் மோதிய ரஞ்சித் டிராபி போட்டி சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதற்கடுத்து விளையாடிய ரியான் பராக் தலைமையிலான அசாம் அணி 159 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனதுடன் ஃபாலோ ஆனும் ஆனது.

இதனால் தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்ட அசாம் அணி மீண்டும் விக்கெட் சரிவுக்கு உள்ளானது. அந்த அணியின் எந்த பேட்ஸ்மேனும் அரை சதம் அடிக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அசாம் அணியின் கேப்டன் ரியான் பராக் ஒரு முனையில் நின்று அதிரடியில் மிரட்டினார். சில ஆண்டுகளாகவே உள்நாட்டு கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அதிரடியாகவும், சுழல் பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுத்தும் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்கிறார்.

இந்த முறையும் ரஞ்சி டிராபியில் இந்த போட்டியில் அதிரடியில் கலக்கிய ரியான் பராக் 56 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து ஆச்சரியப்படுத்தினார். மேலும் தொடர்ந்து விளையாடிய அவர் 87 பந்துகள் மட்டும் விளையாடி 11 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் உடன் 155 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறார்.

ரியான் பராக் ஒரு முனையில் அதிரடியில் இவ்வளவு ரன்கள் குவித்தும், அசாம் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 254 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதற்கடுத்து சிறிய இலக்கை நோக்கி விளையாடிய சத்தீஸ்கர் விக்கெட் இழப்பில்லாமல் 87 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.