“10 ரன் 4 விக்கெட் செமதான் .. பட் கோலி கேட்சை மார்ஸ் விட்டதை அப்பவே மறந்துட்டேன்!” – கம்மின்ஸ் ஆறுதல் பேச்சு!

0
4572
Cummins

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைந்தது.

இரண்டு பெரிய அணிகள் மோதிக் கொள்வதால் வெற்றி பெறும் அனைத்து பெரிய நம்பிக்கை கிடைக்கும். அதே சமயத்தில் தோல்வி அடையும் அணிக்கு சிறிது நம்பிக்கையும் குறையும். எனவே இந்தப் போட்டிக்கு இந்த காரணத்தினால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கில் ஆஸ்திரேலியா அணியில் யாரும் அரைசதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் பந்துவீச்சில் திரும்ப வந்த ஆஸ்திரேலியா இந்திய அணியின் டாப் ஆர்டர் மூன்று பேரை ரன் ஏதும் எடுக்கும் முன்பே செவிலியன் அனுப்பி வைத்து இந்திய அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தது.

மேலும் அணியின் ஸ்கோர் 10ஆக இருந்த பொழுது, விராட் கோலி தந்த எளிமையான கேட்ச் ஒன்றை மிட்சல் மார்ஸ் தவறவிட்டார். இதற்குப் பின்பு விராட் கோலி 85 ரன்கள் எடுத்து கே எல் ராகுலுடன் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

- Advertisement -

இது குறித்து தோல்விக்கு பின் பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது
“குறைந்தபட்சம் நாங்கள் 50 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். 200 ரங்களை வைத்துக் கொண்டு இந்தியாவை அதற்குள் மடக்குவது என்பது கடினமான காரியம் ஆகிவிட்டது.

உண்மையில் நல்ல பந்துவீச்சு தாக்குதல். மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. விராட் கோலி பேச்சை மார்ஸ் விட்டதை நான் எப்பொழுதோ மறந்துவிட்டேன். ஆனால் 10 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்று இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

ஹேசில்வுட் பந்தைக் கொண்டு எப்பொழுதும் நல்ல கேள்வி கேட்கக் கூடியவர். அடுத்த ஆட்டத்திற்கு முன்பாக ஒரு ரிவ்யூ செய்ய வேண்டும். இது பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளம். மேலும் ஒன்பது போட்டியில் இது ஒரு போட்டி. எனவே இது குறித்து வருத்தப்பட எதுவும் இல்லை!” என்று கூறியிருக்கிறார்!