இடம் இல்லை.. 2023-ல் ஆடியும்.. 2024 ஐபிஎல் ஏல லிஸ்டில் இடம்பெறாத 10 வீரர்கள்

0
15562

2024 ஐபிஎல் தொடரானது அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏலமானது டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் நிலையில், ஏலத்திற்கான வீரர்கள் குழு டிசம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது துபாயில் நடைபெறும் முதல் ஐபிஎல் ஏலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மினி ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 214 இந்தியர்களும் ,119 வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் உள்ளனர். இதில் சர்வதேச அணிக்காக 116 வீரர்கள் விளையாடியுள்ளனர். மேலும் 215 பேர் அன்கேப்டு பிளேயர்ஸ் ஆகும்.

- Advertisement -

ஐபிஎல்லில் மொத்தம் பத்து அணிகளை இணைத்து அதிகபட்சமாக 70 இடங்கள் நிரப்பப்பட வேண்டி உள்ளன. அவற்றில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கானது. எனவே 2023ல் விளையாடிய முக்கியமான வீரர்கள் 2024ல் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்

என் ஜெகதீசன்: விக்கெட் கீப்பர் பேட்டரான இவர் 2023ல் கொல்கத்தா அணிக்காக தனது முதல் சீசனில் விளையாடினார். 6 இன்னிங்ஸ்கள் விளையாடி 89 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 110க்கும் குறைவாக உள்ளதால் அவரை கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.

மந்தீப் சிங்: 2023 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் இறங்கினார். 10 வருடங்கள் ஐபிஎல் அனுபவம் கொண்ட இவர், மூணு ஆட்டங்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். பஞ்சாபை சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவருக்கு கடந்த சீசன் மந்தமாகவே அமைந்துள்ளது. இதனால் இவர் 2024 ஐபில்லில் பங்கேற்கத் தவறியதில் ஆச்சரியம் இல்லை.

- Advertisement -

கேதார் ஜாதவ்: பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ். கடந்த சில சீசன்களாகவே சொல்லிக் கொள்ளும்படி விளையாடாத இவர் தனது அடிப்படை விலையை 2 கோடியாக நிர்ணயித்தார். இதனால் ஏழத்தில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவர் ஐபிஎல் வர்ணனையாளராக மாறவும் வாய்ப்பு உள்ளது.

பிரியம் கார்க்: கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். இரண்டு போட்டிகளில் விளையாடி 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். முன்னாள் இந்திய அண்டர் 19 கேப்டன் ஆன இவர் ஐபிஎல்இல் பெரிய அளவில் விளையாட முடியாததால் ஏலத்தில் இருந்து வெளியேறினார்.

கரண் சர்மா: ஆல் ரவுண்டர் ஆன இவருக்கு எப்போதாவது அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி இவரின் செயல்பாடு அமைந்ததில்லை. கடந்த சீசனில் லக்னோ அணிக்காக விளையாடினார். அதிலும் சோபிக்க தவறியதால் லக்னோ அணி அவருக்கு மாற்று வீரனை தேர்ந்தெடுக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை.

ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான இவர், அடுத்து வரும் டி20 உலக கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், பணிச்சுமையைத் தவிர்க்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவர் தன் பெயரை பதிவு செய்யவில்லை. எனவே இவர் வரவிருக்கும் சீசனில் விளையாட மாட்டார்.

பென் ஸ்டோக்ஸ்: பென்ஸ் ஸ்டோக்ஸ் நீண்ட காலமாகவே முழங்கால் காயத்துடன் போராடி வந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இவர் அறுவை சிகிச்சை செய்ததைத் தொடர்ந்து அவரின் நலன் கருதி சிஎஸ்கே அணி நிர்வாகமும் அறிவுறுத்தியதால் 2024 ஐபிஎல் சீசனை அவர் தவற விடுகிறார்.

ஜோ ரூட்: இவர் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அவரின் சொந்த காரணங்களுக்காக 2024 சீசனை தவிர்க்க முடிவு செய்திருப்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

லிட்டன் தாஸ்: வங்காளதேச வீரரான இவரை கடந்த சீசனில் கொல்கத்தா அணி 50 லட்சத்துக்கு வாங்கியது. இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடி நான்கு ரன்கள் எடுத்தார். பின்னர் குடும்ப காரணங்களுக்காக நாடு திரும்பிய அவர் எஞ்சிய போட்டியில் விளையாடவில்லை.

பனுகா ராஜபக்சே: இலங்கையைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரான இவர் கடந்த சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி ஒரு அரை சதத்துடன் 71 ரன்கள் குவித்தார். இவரை 50 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது. பின்னர் காயம் காரணம் உங்களால் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவரது பிட்னஸ் மற்றும் காயம் காரணமாக பஞ்சாப் அணி அவரது பெயரை தற்போது விடுவித்துள்ளது.

சிசண்டா மகலா: சிஎஸ்கே அணையில் கடந்த சீசனில் ஜாமிசன்க்கு பதிலாக மகலா மாற்று வீரராக வாங்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியவர் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் அவரும் காயம் காரணமாக பாதியில் இருந்து வெளியேறினார். இதனால் தற்போது சிஎஸ்கே அணி அவரை விடுவித்துள்ளது.