1 கேட்ச் மிஸ்.. மேட்ச் மிஸ்.. ஆஸியிடம் பரிதாபமாக தோற்ற பாகிஸ்தான்.. புள்ளி பட்டியலில் சரிவு.. உலக கோப்பை அரையிறுதி வாய்ப்புகள் மாற்றம்!

0
657
Australia

இன்று பெங்களூர் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணியும் பாகிஸ்தான் அணியும் மோதிக்கொண்ட பெரிய போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பாகிஸ்தான அணியில் ஒரு மாற்றமாக துணை கேப்டன் சதாப்கான் நீக்கப்பட்டு, அவரது இடத்தில் உசாமா மிர் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் அபாரமான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார்கள். டேவிட் வார்னர் 10 ரன்களில் இருக்கும் பொழுது தந்த எளிய கேட்ச் வாய்ப்பை உசாமா மிர் தவறவிட்டார். அதற்கான தண்டனையை ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் அனுபவித்தது.

ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தார்கள். மிட்சல் மார்ஸ் 108 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 121 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து டேவிட் வார்னர் 124 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 163 ரன்கள் குவித்தார்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 400 ரன்கள் எடுக்கும் இடத்தில் இருந்தது. அதற்குப் பிறகு வந்த பேட்ஸ்மேன் யாரும் சரியான பங்களிப்பு செய்யாத காரணத்தினால், ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அந்த அணிக்கு மேக்ஸ்வெல் 0, ஸ்மித் 7, ஸ்டாய்னிஸ் 21, ஜோஸ் இங்லீஷ் 13, லபுசேன் 8, கம்மின்ஸ் 6, ஸ்டார்க் 2, ஹேசில்வுட் 0, ஆடம் ஜாம்பா 1 என ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் ஷா அப்ரிடி மிகச் சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில், 1 மெய்டன் செய்து, 54 ரன்கள் விட்டு தந்து, 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தார்கள். அப்துல்லா ஷபிக் 61 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இமாம் உல் ஹக் 71 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது.

அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 18, முகமது ரிஸ்வான் 46, சவுத் ஷகீல் 30, இப்திகார் அகமது 26, முகமது நவாஸ் 14, உசாமா மிர் 0, ஷாகின் ஷா அப்ரிடி 10, ஹசன் அலி 8, ஹாரிஸ் ரவுப் 0* என ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 62 ரன்களில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 10 ஓவர்களுக்கு 53 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

ஆஸ்திரேலியா இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே எடுத்திருந்த நான்கு புள்ளிகள் உடன் தற்பொழுது ஐந்தாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறது.