1ஏலம் 3மாங்காய்.. ஜடேஜா வரலையா பரவால்ல.. சிஎஸ்கே-வின் மும்முனை வியூகம்.. தோனி சைலன்ட் அசைன்மென்ட்!

0
5750
Dhoni

சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் மகேந்திர சிங் தோனியின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிக எளிமையாக வைத்திருப்பார்கள். அவர்களுடைய திட்டங்கள் வலிமையாக இருக்கும்.

பொதுவாக களத்தில் மகேந்திர சிங் தோனியின் பந்துவீச்சாளர்கள் சுழற்சி என்பதும், பந்துவீச்சாளர்கள் வீசக்கூடிய இடங்களும், கிரிக்கெட் அறிந்தவர்கள் உணர்ந்த ஒன்றாகவே இருக்கும். அவ்வளவு எளிமையான திட்டங்களை அமைத்தாலுமே, எதிரணி வீரர்களால் அதை உடைப்பது சிரமமாக இருக்கும். சிஎஸ்கே மற்றும் தோனியின் பலமே அடிப்படை விஷயங்களை சலிப்பில்லாமல் செய்வதுதான்.

- Advertisement -

மேலும் அவர்களுக்கு ஒரு மாற்றம் தேவை என்றால், அதை வெகு சீக்கிரத்தில் உணர்ந்து உடனடியாக, அதற்கேற்ற படி தேவைகளை தீர்த்து அணியை வலிமையாக்கி விடுவார்கள். இதில் அவர்களுடைய வேகம் ஆச்சரியப்படுத்தும் ஒன்று.

தற்பொழுது சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி மேற்கொண்டு ஒரு ஆண்டு விளையாடத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இவரது கேப்டன் பொறுப்புக்கு ருத்ராஜ், விக்கெட் கீப்பிங் பொறுப்புக்கு கான்வே, கடைசி கட்டத்தில் பவர் ஹிட்டிங் சிவம் துபே என்று, ஒரு மாதிரி மூன்று ஆட்களை வைத்து சரி கட்டி இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே அணியில் வழக்கமாக விளையாடக் கூடியவர்கள்.

மேலும் சென்னை அணிக்கு அம்பதி ராயுடு மற்றும் சுரேஸ் ரெய்னா இருவரது இடங்களையும் நிரப்பக்கூடிய வீரர்கள் தேவை. நடந்து முடிந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நோக்கமே இந்த இடங்களை நிரப்புவதுதான்.

- Advertisement -

இதற்கு மிகச் சரியாக இந்திய இளம் வீரர் சமீர் ரிஸ்வியை கொண்டு வந்திருக்கிறார்கள். அதே சமயத்தில் இவர் இளம் வீரர் என்பதால், இவருடைய இடத்துக்கு அனுபவம் வாய்ந்த டேரில் மிட்சலையும் வாங்கி இருக்கிறார்கள். சமீர் ரிஸ்வி வாய்ப்பை பயன்படுத்தி விட்டால், அவர்தான் மூன்றாவது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உண்டு.

மேலும் இந்த இடத்தில் இன்னொரு ட்விஸ்ட்டாக மொயின் அலி இடத்திற்கு என்று டிராவிஸ் ஹெட்டை வாங்க போய், அவர் கிடைக்காததால் ரச்சின் ரவீந்தராவை வாங்கி இருக்கிறார்கள். இவர் ஜடேஜா போல இடதுகை சுழற் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜடேஜாவை விட தாக்குதல் பாணியில் விளையாடக்கூடியவர்

ஏற்கனவே ஜடேஜாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் சில மனக்கசப்புகள் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தோனியின் சமாதானத்திற்கு பிறகே அவர் அணிக்கு வந்திருக்கிறார். தோனியின் ஓய்வுக்கு பின் அவர் சென்னை அணியை விட்டு விலகியும் போகலாம். அப்படி அவர் செல்பவராக இருந்தால், ரச்சின் ரவீந்திராவையும் சென்னை அணி விடாது.

மேலும் இதில் இன்னொரு சிறப்பாக அம்பதி ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா இடங்களுக்கு ஒரே இந்திய வீரராக சமீர் ரிஸ்வியை வைத்து நிரப்பியது போல், மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரது இடத்திற்கும், சச்சின் ரவீந்திரவை வைத்து நிரப்பி இருக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு ஏலத்தில் மூன்று மாங்காய்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மற்றும் தோனி அடித்திருக்கிறார்கள். நாளை எதிர்காலத்தில் என்ன பிரச்சனைகளும் தேவைகளும் வந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் சமாளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!

.