நேற்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆர் சி பி அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதே சமயத்தில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தொடர்ந்தது.
நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 255 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தொடர வேண்டும் என்றால் 166 ரன்கள் எடுத்தால் போதும் என்கின்ற நிலை இருந்தது. அப்போதுதான் நேரடியாக இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாட முடியும்.
இதைத்தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்த போதும் முதல் மூன்று விக்கெட்டுகள் சீக்கிரத்தில் விழுந்து விட்டது. இதன் காரணமாக அடுத்து வந்த கேப்டன் படிதார் மற்றும் குர்னால் பாண்டியா இருவரும் கொஞ்சம் பொறுமையாக விளையாட 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் ஆர்சிபி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து விட்டது.
இது குறித்து ரஜத் படிதார் பேசும்போது “இந்த போட்டியை பொறுத்தவரையில் இந்த ஆடுகளத்திற்கு இது கொஞ்சம் அதிக ரன் ஆக அமைந்துவிட்டது. இந்த ஹைதராபாத் ஆடுகளம் மெதுவானது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் கொஞ்சம் வந்து பிடித்து நின்று வந்தது. இதை ஸ்லோ பௌன்சர்கள் மூலம் ஆடுகளத்தில் அடித்து வீசினால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவை ஹைதராபாத் பவுலர்கள் மிகச் சிறப்பாக செய்தார்கள்”
இதையும் படிங்க : நல்லவேளை விராட் கோலி ஒதுங்கிட்டாரு.. இல்லனா இந்திய அணியில் இன்னும் அந்த குழப்பம் இருந்திருக்கும் – ரவிச்சந்திரன் அஸ்வின்
“எங்களுடைய நோக்கம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. நாங்கள் அதை நோக்கியே விளையாடினோம். இருந்தபோதிலும் ஹைதராபாத் 255 ரன் என்ற அளவில் பெரிதாக எடுத்து விட்டது. எனவே அதை நோக்கி செல்ல முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.