Uncategorized

நான் பிளான லீக் பண்ணி சிஎஸ்கேவுக்கு துரோகம் பண்ணினேனா?.. எங்க இருந்துடா நீங்களாம் வரீங்க – அஸ்வின் கடுமையான கோபம்

இந்திய மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியின் ரசிகர் ஒருவரின் ட்விட்டர் பதிவுக்கு கடுமையான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு தானாக விலகிக் கொண்டார். சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கு சங்கடத்தை கொடுக்க வேண்டாம் என தானாக விலகியதாக விளக்கம் சொல்லி இருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கிரிக்கெட் சயின்டிஸ்ட் என பலரும் ரவிச்சந்திரன் அஸ்வினை கூறுவார்கள். அந்த அளவிற்கு அவர் ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து மிகச் சிறப்பான தீர்வுகளை கைவசம் வைத்திருப்பார். மேலும் எந்த அணிக்கும் ஆதரவு மனநிலை இல்லாமல் சரி தவறுகளை தனது யூட்யூப் சேனலில் தெரிவிப்பார்.

மேலும் அவரை சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என பல ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர் பதவிக்காகத்தான் இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்றும் சிலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

அஸ்வின் கோபம்

இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் “சிஎஸ்கே அணிக்கு யார் பயிற்சியாளராக வந்தாலும் அஸ்வின் வந்துவிடக்கூடாது. தனது சேனலில் பணம் சம்பாதிப்பதற்காக நம்முடைய பிளேயிங் லெவனை எதிரணிக்கு முன்கூட்டியே தெரிவித்து விடுகிறார்” என்று எழுதி இருந்தார்.

இதையும் படிங்க: சிஎஸ்கேவை புத்திசாலித்தனமா அடிச்சு தூக்கிட்டு.. பலமான ஆர்சிபிக்கு இஷான் பண்ண சம்பவம் வேற மாதிரி – வீரேந்தர் சேவாக் பாராட்டு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அஸ்வின் “உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். நான் உங்கள் எவனையும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திட்டங்களையும் எதிரணிக்கு தெரியப்படுத்தி விடுவேன். இப்படி செய்தால் ஊழல் தடுப்பு பிரிவால் நான் தண்டிக்கப்பட்டு விடுவேன். ரூல்ஸ் கூடத் தெரியாம எங்க இருந்துடா வரீங்க? அடுத்து தோனி இருக்கும் போது வேறு பயிற்சியாளரை ஏன் தேடுகிறீர்கள்?” என்று பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -
Published by