நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் வைபவ் சூரியவன்சி 37 பந்துகளில் 103 ரன்கள் குவிக்க 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 29 பந்துகளில் 57 ரன்கள், இஷான் கிஷான் 31 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 18.3 ஓவரில் இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
திரும்பி வந்த பேட் கம்மின்ஸ்
இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று முதல் முறையாக மீண்டும் களத்திற்கு கேப்டனாக திரும்பினார். முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட அணியும் வெற்றி பெற்றது.
இதுகுறித்து பேட் கம்மின்ஸ் பேசும்போது ” நான் செயல்பட்ட விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காயத்திற்கு பிறகு திரும்பி வந்து முதல் போட்டி எப்படி இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய தயாரிப்புகள் மிகவும் சரியாக இருந்தன. எனக்கு இப்போது அதிக அனுபவம் இருப்பதால், 10 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த காலத்தை விட இப்பொழுது சீக்கிரத்தில் ரிதம் கிடைத்து விடுகிறது”
இஷான் சிறப்பாக செய்தார்
“எங்கள் அணியில் உள்ள இளம் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருக்கிறார்கள். அவர்களை இஷான் கேப்டனாக சிறப்பாக வழி நடத்தி இருந்தார். இதனால் இப்பொழுது எங்களிடம் நல்ல ஒரு பந்துவீச்சு குழு உள்ளது. இளம் வீரர்கள் தெளிவான திட்டத்துடன் வந்து அதை சரியாக செயல்படுத்தினார்கள்”
இதையும் படிங்க : ரிக்கி பாண்டிங் சார் எங்களுக்கு சொன்ன அறிவுரை இதுதான்.. 240 ரன்னை டெல்லி தாண்டியதும் முடிவு பண்ணிட்டோம் – பிரியன்ஸ் ஆர்யா பேச்சு
“நாங்கள் இந்த போட்டியில் பந்து வீசிக்கொண்டிருக்கும்போது இறுதி கட்டத்தில் மிகவும் அமைதியாக இருந்தோம். அவர்களால் 250 ரன்கள் எடுத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் இறுதி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அவர்களை 230 ரன்னுக்குள் தடுத்து நிறுத்தினோம். இந்த இலக்குக்கு நீங்கள் பவர் பிளேவில் முன்னிலை எடுத்து விட்டால் ஓவருக்கு 10 ரன் மட்டுமே தேவைப்படும். இஷான் போன்ற வீரர்கள் இந்த ரன்னை எளிதாக எடுத்து விட முடியும். எனவே நாங்கள் நம்பிக்கையாக இருந்தோம்” என்று கூறி இருக்கிறார்.






