இந்திய அணி அசத்தல் பந்துவீச்சு; பாகிஸ்தான் அணியைக் கட்டுப்படுத்தியது!

0
45
India

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஆசியக் கோப்பை தொடரின் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றனர். ரிஷப் பண்ட்க்கு இடம் இல்லை. விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றார்.

- Advertisement -

இதையடுத்து பாகிஸ்தான் அணியின் இன்னிங்சை தொடங்க பாபர் அஸம்மற்றும் முஹம்மது ரிஸ்வான் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஷ்வர் குமாரின் சிறப்பான பந்து வீச்சில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஒரு முனையில் துவக்க ஆட்டக்காரர் முஹம்மது ரிஸ்வான் நிலைத்து நின்று விளையாடினாலும் அவரால் பவுண்டரி சிக்சர் என்று அதிரடியாக விளையாட முடியவில்லை. இன்னொருபுறம் அதிரடியாக விளையாடிய பக்கர் ஜமான் ஆபீஸ் கானின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இடம்கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து முஹம்மது ரிஸ்வான் ஓடு இணைந்த இப்திகார் அரைசத. பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனாலும் இந்த ஜோடியின் பேட்டிலிருந்து அதிரடியாக ரன்கள் வரவில்லை. இறுதியாக 42 பந்தில்43 ரன்கள் எடுத்து முஹம்மது ரிஸ்வான் வெளியேறினார். அடுத்து பாகிஸ்தான் அணிக்கு மளமளவென்று விக்கெட்டுகள் சரிந்தது.

- Advertisement -

ஒரு முனையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முக்கியமான நேரத்தில் பாகிஸ்தான் அணியின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிபாகிஸ்தான் அணியை சரிவில் தள்ளினார்.

இதையடுத்து பந்தை கையில் எடுத்த புவனேஸ்வர் குமார் தனது இரண்டாவது ஸ்பெல்லில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கினார். இறுதியாக19.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 147 ரன்கள் எடுத்தது. புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் பந்துவீசி இருவத்தி ஆறு ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.

பத்து மாதங்களுக்கு முன்பு இதே மைதானத்தில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு இந்திய அணி இந்த ஆட்டத்தில் பழிதீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது மேலும் அதிகரித்து இருக்கிறது!