ஆர்சிபி அணிக்கு பின்னடைவு; இளம் நட்சத்திர வீரர் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!

0
617
RCB

இந்த மாதம் கடைசி மார்ச் 31ஆம் தேதி உலகின் நம்பர் 1 டி20 கிரிக்கெட் லீக் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. எதற்கடுத்து இரண்டு மாதங்கள் நடைபெற்று மே மாதம் 28ஆம் தேதியோடு முடிவடைகிறது!

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடத்தப்பட்டு, எட்டு அணிகளாக இருந்த அணிகள் 10 அணிகளாக உயர்த்தப்பட்டு, புதிய வீரர்களோடு அணிகள் புதிதாக களம் இறங்கின.

- Advertisement -

கடந்த ஐபிஎல் சீசனில் புது அணியாக ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்கொண்டு அபாரமாக விளையாடி, தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இதற்கு அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் தேவைப்படும் இரண்டொரு முக்கிய வீரர்களை பொறுக்கி எடுத்து ஒவ்வொரு அணியும் தங்களை பலப்படுத்திக் கொள்ளும் வேலை நடைபெற்றது.

இந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இங்கிலாந்து 21 வயதான வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை சுழற் பந்து வீச்சாளரான வில் ஜாக்ஸை 3.2 கோடிக்கு வாங்கியது. டி20 பிரான்சிசைஸ் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வரும் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு நீண்ட கால வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது பெங்களூர் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளங்கி வரும் கேப்டன் டு பிளசிஸ் ஓய்வு பெறும் பொழுது, அவரது இடத்தை நிரப்பக்கூடிய வீரராக இவர் பார்க்கப்பட்டார்!

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிய வில் ஜேக் காயமடைந்தார். பின்பு அவரது காயத்தை பரிசோதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகுகிறார் என்று தெரிவித்திருக்கிறது.

தொடர் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் பெங்களூர் அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகும். நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அடிப்படை விலையாக ஒரு கோடிக்கு வந்த நியூசிலாந்து அணியின் வலது கை சுழற் பந்துவீச்சாளர் மற்றும் இடது கை அதிரடி பேட்ஸ்மேன் மைக்கேல் பிரேஸ்வெல் விலை போகவில்லை. இந்த நிலையில் தற்பொழுது அவரிடம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது!