இந்திய இளம் வீர 15 வயதான வைபவ் சூரியவன்சி எல்லா பந்துவீச்சாளர்களுக்கும் ஒரு பயத்தை உருவாக்கி இருக்கிறார் என தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் கூறியிருக்கிறார்.
நேற்று வைபவ் சூரியவன்சி பும்ரா வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்தார். மேலும் அதே ஓவரில் இன்னொரு சிக்ஸ்ரும் அடித்தார். அவரது பேட்டிங் மிகவும் தைரியமாக இருப்பதோடு துல்லியமாகவும் இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.
பயத்தை உருவாக்கி இருக்கிறார்
மேலும் நேற்றைய போட்டியில் சர்துல் தாக்கூர் வீசிய முதல் பந்தையும் சிக்ஸருக்கு அடித்தார். ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் கடந்த வருடம் இதே போல இவரது முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டேல் ஸ்டெய்ன் கூறும்பொழுது ” வைபவ் சூரியவன்சி பந்துவீச்சாளர்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கி இருக்கிறார். எல்லாப் பந்தையும் வெளியில் அடித்து விடுவார் என்கின்ற எண்ணம் பந்துவீச்சாளர்களுக்கு உருவாகியுள்ளது. பும்ரா வீசிய அந்த முதல் பந்து ஸ்லாட்டில் இருந்தது”
பும்ராவும் பயப்படுகிறார்
“பெரிய பந்துவீச்சாளரான பும்ராவுக்கு கூட உள்ளுக்குள் ஒரு எண்ணம் இருந்திருக்கிறது. நாம் சிறிது தவறு செய்தாலும் இந்தப் பையன் வெளியில் அடித்து விடுவான் என்று அவர் நினைத்திருக்கிறார். இப்படி பயந்து நினைத்தால் நாம் தவறுகள் செய்ய ஆரம்பித்து விடுவோம்”
இதையும் படிங்க : ஐபிஎல்-ல் சிறந்த ஓபனர்கள் ஜெய்ஸ்வால் வைபவ்தான் .. 15 வயசு பையனை சாதாரணமா நினைச்சுடாதீங்க – ரியான் பராக் பேட்டி
“அந்தப் பையன் சிக்ஸர் அடித்ததும் அவர் சிரிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் அவர் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் என்றும் தெரிகிறது. மேலும் நீங்கள் லென்த்தை சரியான முறையில் வைக்க வேண்டும். இல்லையென்றால் எதிரில் இருப்பது பும்ராவாக இருந்தாலும் இந்த பையன் வெளியில் அடித்து விடுவான்” என்று கூறி இருக்கிறார்.






