அரை மணி நேரத்தில் உலகக் கோப்பையை ஜெயிச்சோம்.. நீங்க எப்படி இந்தியா கிட்ட இந்த முடிவை எடுக்கலாம்? – கங்குலி கேள்வி

0
14
Ganguly

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெறும் அரை மணி நேரத்தில் வென்று விட்டதாக இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்ற இந்திய அணியை நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இந்திய தொடக்க ஜோடி அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து ஆர் ஓ அவர்களின் 92 ரன்கள் அதிரடியாக குவித்தார்கள்.

- Advertisement -

அரை மணி நேரத்தில் வென்று விட்டோம்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி நியூசிலாந்து டாஸ் வென்று அபார பேட்டிங் வலிமை கொண்ட இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது மிக தவறான முடிவு என விமர்சனம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து சௌரவ் கங்குலி பேசும் பொழுது ” நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் இரவு ஏழு முப்பது மணிக்கு கோப்பையை இழந்துவிட்டது. இந்தியா போன்ற அசுரத்தனமான பேட்டிங் யூனிட்டை கொண்டிருக்கும் ஒரு அணியை எப்படி நீங்கள் முதலில் பேட்டிங் செய்ய அழைப்பீர்கள்? ஏழு மணிக்கு தொடங்கிய போட்டியில் அடுத்த அரை மணி நேரத்தில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று விட்டது”

- Advertisement -

இது தவறான முடிவு

“இந்தியாவின் பேட்டிங் யூனிட்டில் முதல் எட்டு இடங்களில் யார் இருக்கிறார்கள்? என்று நீங்கள் பாருங்கள். இப்படிப்பட்ட அவர்களை நீங்கள் முதலில் பேட்டிங் செய்ய வைக்க கூடாது. மேலும் அதற்கடுத்து உங்களுக்கு பந்துவீச்சில் பும்ரா வந்து விடுகிறார். இவர்களை நீங்கள் வெல்வது மிகவும் கடினம்”

இதையும் படிங்க : சாம்சனை சதம் அடிக்க சொன்னேன்.. அதற்கு அவர் இதைத்தான் பதிலாய் சொன்னார் – இந்திய பேட்டிங் கோச் பேட்டி

“தற்போது இந்தியாவுக்கு விளையாடாதவர்களை நீங்கள் பார்த்தாலே இந்தியா எவ்வளவு வலிமையானது என்று உங்களுக்கு தெரியும். மேலும் 14 வயதான வைபவ் சூரியவன்சி வரையில் மிகச் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவால் எளிதாக இரண்டு தரமான அணிகளை உருவாக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -