சாம்சனை சதம் அடிக்க சொன்னேன்.. அதற்கு அவர் இதைத்தான் பதிலாய் சொன்னார் – இந்திய பேட்டிங் கோச் பேட்டி

0
10
Kotak

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சு சாம்சன் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை எப்படி எதிர்கொண்டார்? என்பது குறித்து பேசியிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடி 329 ரன்கள் குவித்தார். ஒட்டு மொத்த டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் தொடர் நாயகன் விருதையும் அவரே வென்றார்.

- Advertisement -

நாங்கள் இதை செய்தோம்

இந்த நிலையில் உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிக்கும் பொழுது இல்லாத சஞ்சு சாம்சன் இறுதியில் தொடர் நாயகனாக உருவானது எப்படி என்பது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிசான்சு கோடக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நாங்கள் பிளேயிங் லெவனில் இல்லாத வீரர்களையும் நம்பிக்கை இருக்க வைத்ததுதான் எல்லாவற்றுக்கும் காரணம். உதாரணமாக சஞ்சு விளையாடாத போது இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருந்தார். ஒவ்வொரு நாளும் விஷயங்கள் மாறும், வீரர்களுக்கு ஃபார்ம் இல்லாமல் போகும், எனவே தயாராக இருக்க வேண்டும் என அவரிடம் நான் கூறியிருந்தேன்”

- Advertisement -

சதம் அடிக்க சொன்னேன்

“சஞ்சு சாம்சன் என்னிடம் நீங்கள் எப்போது என்னை உள்ளே சென்று விளையாட சொன்னாலும் நான் மிகச் சிறப்பாக அதைச் செய்வேன் என்று கூறியிருந்தார். அவர் சொன்னபடியே அனைத்து விஷயங்களையும் மிகச் சிறப்பாக செய்தார்”

இதையும் படிங்க : எனக்காக உலகக் கோப்பையை ஜெயிச்சு தரியானு இஷான் கிட்ட கேட்டேன்.. அவர் சொன்ன பதில் இதுதான் – சூரியகுமார் யாதவ் பேச்சு

“மேலும் நான் அவரிடம் சதம் அடிக்க வேண்டும் என்று கூறினேன். நீங்கள் ஒருபுறம் தனிப்பட்ட சாதனைகள் குறித்து யோசிக்க கூடாது என்கிறீர்கள், ஆனால் சதம் அடிக்க வேண்டும் என்கிறீர்கள், இரண்டு விஷயங்களும் எப்படி சாத்தியமாகும்? என்று நகைச்சுவையாக கேட்பார். ஒரு போதும் அவர் சதத்தை நெருங்கிய போது அதற்காக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -