இங்கிலாந்து கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் இளம் வீரர் ஹாரி புரூக்கை அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி முதல் இரண்டு போட்டிகளில் வென்று கைப்பற்றி விட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக ஹாரி புரூக் பேட்டிங் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் தான் ஜோ ரூட் அவரை பாராட்டியிருக்கிறார்.
ஜெயஸ்வாலுக்கு அடுத்த இடத்தில் புரூக்
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் அதிக ரன் எடுத்தவராக இங்கிலாந்து ஜோ ரூட் 38 இன்னிங்ஸ்களில் 1881 ரன்கள் எடுத்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் ஜெயஸ்வால் 30 இன்னிங்ஸ்களில் 1592 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 27 இன்னிங்ஸ்களில் 1462 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து முக்கியமான இரண்டு சதங்கள் அடித்ததோடு, ஒரு அரை சதத்தையும் அடித்து அசத்தியிருக்கிறார்.
அவரை என்னால் பிடிக்க முடியவில்லை
ஹாரி புரூக் குறித்து ஜோ ரூட் கூறும்பொழுது “புரூக் இந்தஇந்த நிமிடத்தில் உலகத்தின் சிறந்த வீரராக இருக்கிறார். அவரை நான் பிடிக்க முயற்சி செய்கிறேன். ஆனாலும் அவர் சிறந்த வீரர் இல்லையா என்னால் அது முடியவில்லை. அவர் வெளிப்படையாக சிறந்த வீரர்களில் ஒருவர். அவருடன் விளையாடுவதும் அவர் விளையாடுவதை பார்ப்பதும் அருமையானது”
“கடந்த வாரத்தில் அழுத்தத்திற்கு மத்தியில் சிறப்பாக அடித்த ஒரு சதத்திற்கு பிறகு மீண்டும் அதையே அவர் செய்திருக்கிறார். ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸை கட்டமைத்து இருக்கிறார். அவர் அழுத்தத்தை உள்வாங்க முடியும். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்”
இதையும் படிங்க : சிராஜ் உனக்கு மூளை இல்லையா?.. அஸ்வின ஒரு ஸ்பின்னராவே மதிக்கல – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“அவரால் உங்கள் தலைக்கு மேல் சிக்ஸ் அடிக்க முடியும். மேலும் ஸ்கூப் ஷாட் மூலம் உங்கள் தலைக்கு மேல் சிக்ஸ் அடிக்க முடியும். அவரால் சுழல் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாட முடியும் வேகப்பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.






