இந்திய அணி கடந்த வாரம் சனிக்கிழமை டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று டி20 உலக சாம்பியன் ஆனது. இந்த நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே அணியிடம் தோற்று ஒரு மாபெரும் உலக சாதனையை செய்யும் வாய்ப்பையும் நழுவ விட்டு இருக்கிறது.இந்திய அணி கடந்த வாரம் சனிக்கிழமை டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று டி20 உலக சாம்பியன் ஆனது. இந்த நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே அணியிடம் தோற்று ஒரு மாபெரும் உலக சாதனையை செய்யும் வாய்ப்பையும் நழுவ விட்டு இருக்கிறது.
இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஹரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. ஜிம்பாப்வே அணியை இந்திய அணிவுடன் ஒப்பிடும் பொழுதுஅனுபவம் மற்றும் திறமையில் மிகவும் பின்தங்கி தெரிந்தது.
மேலும் இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி இந்த இலக்கை குறைந்தபட்சம் 15 ஓவர்களில் எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆவது வெற்றி பெற்று விடும் என்று பலர் எதிர்பார்த்து இருந்தார்கள்.
இப்படியான நிலையில் இந்திய அணி கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. டி20 உலக சாம்பியன் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வென்று அதிர்ச்சி கொடுத்தது. இதன் மூலம் இந்திய அணியின் மாபெரும் டி20 உலகச் சாதனைக்கும் ஜிம்பாப்வே அணி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை தொடர்ந்து வென்ற அணி என்கின்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கும். இந்தப் பட்டியலில் பல பெரிய அணிகளுக்கு இடமே இல்லாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த மகத்தான சாதனை முயற்சி இன்று ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்ததால் முடிவுக்கு வந்திருக்கிறது.
இதையும் படிங்க : 102 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகற பிட்ச்சே இது கிடையாது.. ஒன்ன சொல்லிதான் பிளேயர்ஸ கூட்டிட்டு வந்தேன் – சிக்கந்தர் ராஸா பேட்டி
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளை வென்ற அணிகள்:
13 – மலேசியா (2022)
13 – பெர்முடா (2021-23)
12 – ஆப்கானிஸ்தான் (2018-19)
12 – ருமேனியா (2020-21)
12 – இந்தியா (2021-22)
12 – இந்தியா (2023-24)