இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் தங்களது சொந்த மண்ணில் விளையாடிய இலங்கை அணியை ஜிம்பாப்வே அணி அனாயசமாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் இந்த போட்டி பெரிய மைதானமான கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.
நிஷாங்கா அதிரடி
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 8 பவுண்டரிகள் உடன் 41 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்கார குஷால் பெரேரா 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் உடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து மிடில் வரிசையில் வந்த பவன் ரத்னாயகே மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 44 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
சிக்கந்தர் ராஸா அதிரடி
இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மருமணி 26 பந்துகளில் 34 ரன்கள், இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பென்னட் ஆட்டம் இழக்காமல் 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
இதையும் படிங்க : தம்பி அபிஷேக் இதை மட்டும் மாத்தி விளையாடு.. உன்னோட பேட் பேசும் நாள் வரும் – ஹர்பஜன் சிங் அறிவுரை
இதைத்தொடர்ந்து கடைசி கட்டத்தில் உள்ளே வந்த கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 45 எடுத்து வெற்றியை எளிதாக்கினார். ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஜிம்பாப்வே அணி இந்திய அணிக்கு எதிராக சென்னையில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.






