இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அந்த அணியை 80 ரன்னுக்கு சுருட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வென்றது. இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியே வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பரிதாபமாக சுருண்ட இலங்கை
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா 8, குசால் மெண்டிஸ் 1 ரன் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து வெளியேற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து கேப்டன் அசலங்கா 18, கமீந்து மெண்டிஸ் 0, முன்னாள் கேப்டன் சனகா 15 என சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தார்கள். இலங்கை அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன் மட்டுமே எடுத்து சுருண்டது. ஜிம்பாப்வே பந்துவீச்சில் பிராட் ஈவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராஸா இருவரும் கலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.
ஜிம்பாப்வே வெற்றி
இதைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் 19, மருமாணி 18, ரியான் பரல் 20, தசிங்கா 21 ரன்கள் எடுக்க அந்த அணி 14.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் சமீரா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : கம்பீர் எல்லாருக்கும் ஒரு மெசேஜ் சொல்லி இருக்கார்.. ஆசிய கப்புக்கு அத ஆரம்பிச்சிட்டோம் – ஷிவம் துபே பேட்டி
அடுத்த நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பில் இருக்கும் அணியாக இலங்கை கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா போல இலங்கை அணியை குறைந்த ரன்னுக்கு சுருட்டி ஜிம்பாப்வே அணி வென்றது இலங்கை அணி ரசிகர்களுக்கு வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது.






